Wednesday 19 April 2023

ஜோதிடம் காட்டும் ஒளி தத்துவம்

 ஜோதிடம் காட்டும் ஒளி தத்துவம் .


               


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  கால புருஷ தத்துவப் படி மேஷத்தில் தொடங்கி மீனம் வரை பன்னிரெண்டு ராசிகள் தரப்பட்டுள்ளது.


 ஆனால் ஒளியை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது சூரியன் வீடாகிய சிம்மம் முதல் வீடாக கருதப்படுகிறது.சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி எல்லா கிரகங்களுக்கும் பிரதிபலிக்கக்கூடிய தன்மையினை சந்திரன் 🌙 பகவான் பெறுகிறார்.சந்திரன் மற்றும் சூரியன்  பகவானை அடுத்தடுத்த நிலையில் கொண்டு இருக்கிறது.


   ஒளி அடிப்படையில் பார்க்கும்போது சிம்மமே முதல் வீடாகவும் அதனை அடுத்து கடகம் இரண்டாம் நிலை வீடாக கருதப்படுகிறது.


 அம்மை மற்றும் அப்பனாக  விளங்கும் சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இருவருக்கும் ஒரே ஒரு ஆதிபத்தியம் மட்டுமே பெற்று உள்ளது.


 இதனை அடுத்து ஆலோசனை வழங்கும் மந்திரிகள் இருப்பார்கள்.அந்த வகையில் ஆலோசனை வழங்கும் மதியுகி மந்திரியான புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ஆகிய இரு வீடுகளில் இருபுறமும் நிற்பார்கள்.


அதனையடுத்த அரச குல பெண்களான சுக்கிரன் பகவான் ரிஷபம் மற்றும் துலாம் வீட்டில் வாசம் செய்கிறார்.


 போர்வீரர்கள்,படை தளபதிகளான செவ்வாய் பகவான் ஆனவர் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய  இருபுறமும் வாசம் செய்கிறார்.


 அந்தணர்களான குரு பகவான் தனுசு, மீனம் போன்ற வீடுகளில் நின்று உலக வளர்ச்சிக்கு  ஓதுவார்கள்.


  நிறைவாக மகர மற்றும் கும்ப வீடுகளே நிறைவான வீடாக கருதப்படுகிறது.

இங்கு சனி பகவான் அமர்ந்து இருள் நிறைந்த கிரகமாக காணப்படுவார்.

முழு பாவராகவே வேறு சுபத்துவம் அடையாத நிலையில் செயல்படுவார்.


  ஒளி கிரகமான சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு வீடுகள் சந்திக்கும் எல்லையினை மையமாக கொண்டு இரு சமச்சீராக பிரிக்கின்ற அமைப்பில் சமமாக இரு புறமும் சம தன்மையில் கிரகங்கள் இடம் பெற்றிருக்கிறது.


  ஆக இரு புறமும் ஒளியில் துவங்கி இருளில் சென்றடைகிறது.


 அடுத்தபடியாக சூரியன் சுழற்சி மாற்றத்தை அடிப்படையாக கொண்டு ராசிகள் பிரிவுக்கு உட்படுத்தப்படுகிறது. சூரியன் பகவான் சித்திரை மாதம் மேஷத்திலும் , வைகாசி மாதம் ரிஷபத்திலும் இவ்வாறாக மாதம் ஒரு ராசி வீதமாக பங்குனி மாதம் மீன வீட்டில் சென்றடைந்து ஒரு ஆண்டை நிறைவு செய்கிறார்.


 இங்கு சித்திரை மாதத்தில் சூரியன் கதிரின் தாக்குதல் சித்திரை மாதத்தில் அதிகமாக இருக்கக்கூடிய மாதத்தில் உச்சம் நிலையினை அடைகிறார்.அதேநேரத்தில் ஐப்பசி மாதத்தில் சூரியன் கதிரின் தாக்குதல் குறைவாக உள்ள நிலையில் நீசம் அடைகிறார்.


 சரி நம் விஷயத்திற்கு வருவோம்.சூரிய சுழற்சி மாற்றத்தால் தட்சிணாயன காலம் மற்றும் உத்தராயண காலம் என இரு வகையாக பிரிவுக்கு உட்படுத்தப்படுகிறது.


 தட்சிண + அயனம் அதாவது தட்சிணா என்றால் தெற்கு என்று பொருள்படும்.அயனம் என்றால் நகர்தல் ஆகும்.தட்சிணாயனம் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு தெற்கு நோக்கி நகர்தல் என்று பொருள்படும்.


  ஆதலால் ஆடி மாதம் அதாவது கடக ராசியில் சூரியன் பகவான் தனது சுழற்சியை தெற்கு நோக்கி நகர ஆரம்பிப்பார்.இந்த தெற்கு நோக்கிய சுழற்சியானது ஆடி,ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய ஆறு மாத காலங்கள் சூரியன் தெற்கு நோக்கிய சுழற்சியினை மேற்கொள்வார்.


  ஆடி மாதத்தில் சூரியன் உதயம் செய்யும் காலம் முதல் மார்கழி மாதம் வரை தேவர்களின் இரவு நேரம் ஆகும்.


 ஆடி மாதத்தை தான் குளிர் கால துவக்கமாக கருதப்படுகிறது.ஆடி மாதம் நதிகளில் நீர் திறந்து விடுவார்கள்.ஆடி மாத அமாவாசை மிக முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசை நதி ஓரங்களில் பிடிக்கிறார்கள்.ஆடி பதினெட்டு நதி கரைகளில் புதுமண தம்பதிகள் வழிபாடு நிகழ்த்துகிறார்கள்.


ஆடி மாதம் தான் விதை விதைக்க உகந்த காலமாக விளங்குகிறது.நமது முன்னோர்கள் "ஆடி பட்டம் தேடி விதை " என்றார்கள்.


ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.இதனால்தான்

 "ஆடி காற்றில் அம்மியும்  நகரும்" என்றார்கள்.

இவை போன்ற பழமொழிகள் இந்த மாத பெருமையை விளக்குகிறது.


  தை மாதத்தில் சூரியன் பகவான் தனது சுழற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சுழல ஆரம்பிக்கும் காலத்தை உத்தராயண காலம் என்று அழைக்கிறோம்.உத்தர எனில் வடக்கு , அயனம் எனில் சயனம் அல்லது நகர்தல் ஆகும்.


 தைமாதம் மகர வீட்டில் சூரியன் வரும் போது அறுவடை செய்து புத்தரிசியால் பொங்கி பொங்கல் கொண்டாடப்படுகிறது.இதனை மகர சங்கராந்தி பொங்கல் என்று அழைக்கப்படுகிறது.தை மாதம் அறுவடை செய்து மகசூல் பெருகும் காலம் என்பதால் "  தை பிறந்தால் வழி பிறக்கும்" என்றார்கள்


  இந்த சுழற்சி தைமாதம் தொடங்கி மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மற்றும் ஆனி மாதம் வரை ஆறுமாத காலமாக நீடிக்கிறது.இந்த காலம் கோடை கால துவக்கமாக கருதப்படுகிறது.


   இந்த அயன காலத்தில் பிறப்பவர்கள் புண்ணியம் நிறைந்தவர்களாக கருதப்படுவார்கள் இது தேவர்களுடைய ஒரு பகல் பொழுதாகும்.


   கடகத்தில் குரு உச்சம் அடைவார்.மகரத்தில் குரு பகவான் நீசம் அடைகிறார்.மகரத்தில் நீசம் பெற்ற குரு பகவான் உச்சம் நோக்கிப் நகர்தலை ஆரோ கணமாக கருதப்படுகிறது.


 கடகம் உச்சம் வீட்டில் இருந்து நீசம் பெறும் மகர வீடு வரை குரு நகர்வதை "அவரோ கணமாக கருதப்படுகிறது.


  ஒளி கிரகமான சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இருவருக்கும் இடைப்பட்ட தூரம் திதி ஆகும்.சூரியனை சந்திரன் எட்டு பாகைக்குள்ளாக நகர அமாவாசை அடைகிறது.எனவே அமாவாசைக்கு அடுத்த 

பிரதமையில் துவங்கி பொளர்ணமியில் முடிவடைகிறது .இதனை வளர்பிறை காலம் அல்லது சுக்கில பட்சம் அல்லது பூர்வ பட்சம் என்று அழைக்கப்படுகிறது.இங்கு சந்திரன் முழு சுபராக செயல்படுகிறார். அதாவது ராசியில் இரண்டாம் வீடு முதல் ஏழாம் வீடு வரை ஆகும். சூரியனுக்கு 150 பாகை முதல் 180 பாகை கால அளவில் பொளர்ணமி நிகழ்கிறது.இங்கு சந்திரன் முழு சுபராக கருதப்படுகிறது.


   பொளர்ணமி காலத்தில் பிறந்தவர்கள் ஆட்சிக் கட்டில் உயரிய பதவிகளில் அல்லது அரசாங்கத்தின் உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகம் மற்றும் சித்தர் ஆக திகழக்கூடிய அமைப்பு ஏனைய கிரகநிலை தசா புத்திகளை பொறுத்து அமைகிறது.


     பொளர்ணமியில் இருந்து விட்டு விலகி அமாவாசை நோக்கி நகரும் காலம் தேய்பிறை காலம் என்று அழைக்கப்படுகிறது.இதனை அமர பட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படுகிறது.இங்கு சந்திரன் பாவராக விளங்குகிறார்.


 இதில் சில விதி விலங்குகள் உண்டு.உண்மையில் ஒளி அடிப்படையில் தேய்பிறை பஞ்சமி திதியிலிருந்து வளர்பிறை பஞ்சமி திதி வரை வளர்பிறை காலமாக கருதப்படுகிறது.இதேபோல வளர்பிறை பஞ்சமி திதியிலிருந்து தேய்பிறை பஞ்சமி திதி வரை தேய்பிறை காலமாக கருதப்படுகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & கூகுள் பே & செல்

  097151 89647 


மற்றொரு செல் : 7402570899


E-mail masterastroravi@gmail.com


                        



அன்புடன்

      சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

          M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: