Friday 28 April 2023

மனம் -எண்ணம்-செயல்}~ நடத்தை

 செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 

{ மனம் -எண்ணம் -செயல் ]~ நடத்தை 

 {Mind -Thought -Action }~Character

            


    ஒருவரது நடத்தையை  (character) முடிவு செய்வதில் முதன்மை வகிப்பது மனம் (mind) ஆகும்.

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்"..

மனதின் செயல்பாடு "எண்ணம் "(Thought) ஆகும் .

எண்ணங்கள் இரண்டு வகைப்படும்.

அவையாவன:

 1)  நேர்மறை எண்ணங்கள் (Positive thought)

  2)  எதிர்மறை எண்ணங்கள் (Negative thought)  ஆகும்.

எண்ணத்தின் வலிமையை பொறுத்து எண்ணம் செயலாக (action) மாறுகிறது.


 ஜோதிட அடிப்படையில் மனம் என்பதை குறிக்கும் கிரகம் சந்திரன் ஆகும் மனதிற்கும், சந்திரனுக்கும் நீண்ட நெருங்கிய தொடர்பு ஒன்று. மனதில் தோன்றியதெல்லாம் எண்ணங்களாக மாறும் அந்த எண்ணங்கள் தான் செயலாக மாறுகிறது.. அனைத்து எண்ணங்களும் செயலாக மாறி விடுவதில்லை.


  மனமானது வலிமையாக இருந்தால் மனதில் தோன்றியதை செயலாக மாறிவிடுகிறது ஒரு ஜாதகத்தில் மனநிலைகாரகன் என்று அழைக்கக்கூடிய சந்திர பகவான் வலிமை பெற்று இருக்க வேண்டும் சந்திர பகவான் வலிமை பெறுவது என்பது வளர்பிறைச் சந்திரனாக இருக்க வேண்டும். அடுத்து சந்திரனுடன் சனி அல்லது ராகு 8 பாகைக்குள் நெருக்கமாக இணையாமல் இருக்கப்பட வேண்டும் சந்திரன் நீசம் ,பகை  போன்ற நிலைகளில் வலு இழக்கக்கூடாது.இயற்கை சுப கிரகமான குரு, சுக்கிரன், தனித்த புதன் ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒரு சில கிரகங்கள் வழியாக பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.


        ஜாதகத்தில் சந்திர பகவான் வளர்பிறை சந்திரனாக இருக்க வேண்டும். இயற்கை சுப கிரகமான குரு, தனித்த புதன், சுக்கிரன் ஆகியவை பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு பெற்று சுபத்துவமாக இருந்தால் அவரது மனதில் தோன்றும் அனைத்தும் நேர்மறை எண்ணங்களாக இருக்கும். இந்த நேர்மறை எண்ணத்தின் விளைவாக  நல்ல செயல்கள்  வழியாக நன் நடத்தைகள் நடப்பு  தசா புத்திகள் மற்றும் கோச்சார பலனுக்கு ஏற்ப நடக்கும்.


         மாறாக சந்திரன் பகவான் தேய்பிறை சந்திரனாக இருந்து இயற்கை பாவ கிரகமான சனி,செவ்வாய் ,ராகு ,கேது ,

பாவியுடன்  சேர்ந்த புதன் மற்றும் அரை பாவரான சூரியன் ஆகிய கிரகங்கள் நெருக்கமாக எட்டு பாகைக்குள் பார்வை மற்றும் சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டிருக்க அவரது மனதில் தோன்றும் எண்ணங்கள் அனைத்தும் எதிர்மறை எண்ணங்களாக அமைந்து அவருக்கு நடக்கக்கூடிய தசாபுத்தி மற்றும் கோச்சார பலன் ஏற்ப எதிர்மறையான செயல்கள் வழியாக கெட்ட நடத்தைகள் அவரது வாழ்வில் வெளிப்படும்.


 மனதில் தோன்றும் எண்ணங்கள் அனைத்தும் செயலாக மாறுவதற்கு லக்கனம் மற்றும் அதன் அதிபதியின் வலிமை அவசியமான ஒன்றாகும்.

"எண்ணியது எண்ணி யாங்கு  செயல்பட லக்கனாதிபதியின் வலிமை மிக மிக முக்கியமாக கருதப்படுகிறது.

லக்கனாதிபதி வலிமையாக இருந்தால் மனதில் தோன்றும் எண்ணங்கள் செயலாக மாறுவதற்கு எவ்வளவு எதிர்ப்புகள் மற்றும்  போராட்டங்கள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு அந்த செயலை செயல்படுத்தி வாழ்வில் உயர்வடைவார்.


 மனதில் எண்ணிய எண்ணங்கள் செயலாக மாறி நல்ல முறையில் வெளிப்பட யோக தசைகள் அவரது வாழ்வில் உரிய காலத்தில் வரவேண்டும்.கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி நடப்பில் இல்லாது இருக்க வேண்டும்.


  ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்கக்கூடிய பட்சத்தில் தொடக்க காலத்தில் ஆறு மற்றும் எட்டாம் அதிபதி  அவ யோகத் தசைகள் மற்றும் லக்கன அவ யோக தசைகள் நடப்பிலிருந்தால்  அந்த காலத்தில் பொறுமையாக போராடி எதிர்நீச்சல் போட்டு உகந்த நல்ல தசைகள் வரும் பொழுது அந்த எண்ணத்தின் செயலை நிறைவேற்றி விடுவார்கள்.


ஜாதகத்தில் லக்கனாதிபதி வலிமை குன்றி நடக்கக்கூடிய தசைகளும் தொடர்ந்து அவயோக தசைகளாக அல்லது ஆறு எட்டுக்குடைய தசைகளாக இருந்து கோச்சார அடிப்படையிலும் ஏழரை மற்றும் அஷ்டமச்சனி ஆகியவை நடப்பில் இருந்தால் அவர்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் எவ்வளவு முயற்சித்தும்  எண்ணியபடி அடைய முடியாமல் மனதளவில் பெரிய பாதிப்புக்கு உள்ளார்கள்.


  உங்களுடைய மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றி அந்த நல்ல எண்ணத்தின் விளைவாக நல்ல செயல்கள் தோன்றி அவர்கள் மனதில் தோன்றிய நல்ல எண்ணத்தில் விளைவாக நேர்மறை எண்ணங்கள் தோன்றி அதன் விளைவாக சமூகத்தில் நல்ல  செயல்கள் வெளிப்படுத்தி நன் நடத்தைகள் உடையவனாக திகழ அவரது ஜாதகத்தில் உயிர் மற்றும் உடல் என்றும் அல்லது விதி மற்றும் மதி என்று அழைக்கப்படும் லக்கனம்,லக்கனாதிபதி , ராசி , ராசி அதிபதி ஆகியவை பலம் இழக்க மால் வலிமை பெற்று சுபத்துவமான நிலையில் இருந்து தொடர்ந்து லக்கன யோக தசைகள் நடப்பில் இருக்க வேண்டும்.


நன்றி..


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


           



அன்புடன்


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd,

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: