Tuesday 18 April 2023

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம்

 சூரிய மற்றும் சந்திர கிரகணம்

                 


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


இந்த ஆண்டு ஐப்பசி மாதம் இரண்டு கிரகணங்கள்  வந்து உள்ளது.

ஐப்பசி மாதம் 8ஆம் தேதி (25-10.2022)  சூரிய கிரகணமும்  மற்றும்  ஐப்பசி மாதம் 22ஆம் தேதி 08.11.2022) இன்று சந்திர கிரகணமும் ஏற்பட்டுள்ளது.


  ராகு பகவான் மேஷத்திலும் ,கேது பகவான் துலாத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.ஐப்பசி மாதம் முழுவதும் சூரியன் பகவான் துலா ராசியில் வாசம் செய்வார்.


சூரிய பகவானை சந்திர பகவான் எட்டு பாகைக்குள் நெருங்கும் பொழுது அமாவாசையும் ,சூரியனை சந்திர பகவான் சமசப்தமாக 180 பாகை அளவில் சந்திக்கும்போது பௌர்ணமியும் உண்டாகிறது.


ஐப்பசி மாதம் 22 ந்தேதி அன்று சூரியன் பகவானை எட்டு பாகைக்குள் நெருக்கமாக நெருங்கும் போது அமாவாசையும் அதே நேரத்தில் கேது மற்றும் ராகு பகவான் துலாம் மற்றும் மேஷம் வீட்டில் அமர்ந்த நிலையில் சூரிய கிரகணம் உண்டாகியது.


சூரிய கிரகணம்


 சூரிய கிரகணம் அமாவாசை அன்று ஏற்படுகிறது. இந்த  சூரிய கிரகணம் என்றால் சூரியனை பாம்பு விழுங்கி விடுவதாக நமது பாட்டி சொன்ன கதை ஞாபகத்திற்கு வருகிறது.இங்கு பாம்பு நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானை குறிக்கிறது.


சூரியனை நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானால் விழுங்கி விட முடியாது.அதாவது சூரியனின் ஒளியை புவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு விழ விடாமல் மறைத்துவிடும் என்பதே அறிவியல் உண்மை ஆகும்.


இதில் சூரியனை ராகு பகவான் நெருங்கும் போது உருவாகும் சூரிய கிரகணம் தான் சூரிய ஒளியை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் புவியில் முழுவதும் விழ விடாமல் மறைத்து விடும்.சூரிய பகவானை கேது பகவான் நெருங்குவதால் ஏற்பட்ட சூரிய கிரகணம் பெருமளவு மறைப்பதில்லை.எனவே கடந்த ஐப்பசி 8 ல் நிகழ்ந்த சூரிய கிரகணம் பெரிதாக சூரியனை மறைக்கவில்லை.


 சந்திர கிரகணம்


 பொளர்ணமி அன்று சந்திர கிரகணம் உண்டாகியது. சூரியனை சமசப்தமாக ஏழாம் இடத்தில் 180 பாகையில் சந்திக்கும் போது பௌர்ணமி உண்டாகிறது. சூரிய மற்றும் சந்திரனுடன் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது சந்திக்கும் போது சந்திர கிரகணம் உண்டாகியது.சந்திரனின் ஒளியை நிழல் கிரகமான ராகு அல்லது கேது மறைப்பதால் சந்திரன் ஒளியானது புவியில் விழாமல் சிறிது நேரத்திற்கு தடுக்கப்படுகிறது.


நன்றி


செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே

9715189647


மற்றொரு செல் 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

            


அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 M.SC,M.A, BEd

Teacher & Astrologer

Om sakthi online astro consulting centre,

Karambakkudi.

No comments: