Wednesday 19 April 2023

உங்கள் ஜாதகம் யோகம் மிகுந்த ஜாதியாக திகழ

 உங்கள் ஜாதகம் யோக மிகுந்த ஜாதகமாக திகழ...

        


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  உங்கள் ஜாதகம் யோகம் மிகுந்த ஜாதகமாக இருந்தால் கிரகங்கள் எப்படி இருக்க வேண்டும், நடக்கும் தசைகள் எப்படி இருக்க வேண்டும்.கோச்சார அடிப்படையில் கிரகங்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் ஆராய்ந்து பார்ப்போம்.


   ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் பாவ கிரகங்கள் தொடர்பு பெறாத நிலையில் இருக்க வேண்டும்.இயற்கை சுப கிரகங்கள் லக்கனத்தில் இருக்க வேண்டும் அல்லது பார்க்க வேண்டும்.

லக்கனாதிபதி கேந்திர கோணங்களில் நின்று உச்சம்,மூல திரிகோணம், ஆட்சி,திக் பலம், போன்ற நிலைகளில் வலுப்பெற்று சுபத்துவமான நிலையில் இருக்க வேண்டும்.


  ஜாதகர் பொளர்ணமி யோகத்திலோ அல்லது இயற்கை சுப கிரகங்கள் சந்திரனுக்கு ஆறு, ஏழு மற்றும் எட்டில் நின்று சந்திர அதியோக நிலையில் நின்று தசை நடத்தப்பட வேண்டும்.

இந்த அமைப்பில் இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய் ராகு மற்றும் கேது போன்ற  பாவ கிரகங்கள் தொடர்பு இல்லாத நிலையில் இருக்க வேண்டும்.இவை மட்டுமல்லாமல் இயற்கை சுப கிரகமான குரு பகவான் , சுக்கிரன் அல்லது புதன் பகவான் சேர்க்கை அல்லது பார்வை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.


  ஜாதகத்தில் குரு பகவான் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகிய இரு சுப கிரக பார்வை பெற்ற தசை நடந்தால் ஜாதகருக்கு அவ்விரு கிரகங்கள் பார்வை பெற்ற ஸ்தான ஆதிபத்தியம் மற்றும் கிரகங்கள் அதன் தசை காலங்களில் யோகத்தை அள்ளித் தரக்கூடிய நிலையில் இருக்கும்.


ஒரு ஜாதகம் யோகத்தை அள்ளி தரக்கூடிய ஜாதகமாக திகழ லக்கன யோகர்கள் பாவர்கள் கலப்பு இன்றி இருக்க வேண்டும்.இவ்வாறு பாவர்கள் கலப்பு இல்லாத கிரக தசைகள் தொடர்ந்து நடப்பில் இருக்க வேண்டும்.


 பெரும்பாலும் லக்கனத்திற்கு யோகத்தை அள்ளி தரக்கூடிய தசைகளாக லக்கனம், ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதிகள் தசைகள் ஆகும்.


  இரு ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களில் ஒரு ஆதிபத்தியம் கோண ஆதிபத்தியம் பெற்ற நிலையில் மற்றொன்று மறைவிட ஸ்தான ஆதிபத்தியம் பெற்று இருந்தாலும் அவை லக்கன‌ யோகர்களாகவே  கருதப்படுகிறது.


 இவ்வாறு இரு ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களில் பாவத் பாவ அமைப்பில் கோண ஆதிபத்தியத்திற்கு கேந்திர கோணங்களில் நின்று மற்றொரு மறைவிட ஸ்தான ஆதிபத்தியத்திற்கு ஆறு மற்றும் எட்டாம் இடத்தில் நின்றால் அவை லக்கன யோகராக செயல்படுகிறது.


 அல்லது


 இரு ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களில் ஒரு கிரகம் எந்த ஆதிபத்தியத்துடன் அதிக தொடர்பு கொள்கிறதோ அந்த ஆதிபத்தியம் தொடர்பு கொண்ட பலன்களை 80 சதவீதம் தரக்கூடிய நிலையில் இருக்கும்.


ஒரு கிரகம் அவ யோக தசைகளாக அல்லது மறைவிட ஸ்தான ஆதிபத்தியம் உடைய கிரகமாக இருப்பின் அந்த கிரகம் உப ஜெய ஸ்தானமான 3,6,8,12 ஆம் இடத்தில் நட்பு நிலையில் அல்லது அந்த ஆதிபத்தியத்திற்கு மறைவிட ஸ்தானங்களில் நின்று தசை நடத்தினால் யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசையாக அமைகிறது.


 நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

 097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                   



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: