Monday 24 April 2023

ஒரு கிரகத்தின் வலிமையை விளக்கும் ஸ்தான பலம், திக் பலம் மற்றும் திருக் பலம்

 ஒரு கிரகத்தின் வலிமையை விளக்கும் ,ஸ்தான பலம்,திக் பலம் மற்றும் திருக் பலம்.

             


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் உள்ள கிரகமானது கீழ்க்கண்ட படி நிலைகளில் ஸ்தான வலிமையானது அமைகிறது.


   ஒருவர் ஜாதக கட்டத்தில் உச்சம் போன்ற நிலைகளில் அமரும் போது நூறு  சதவீத வலிமையை பெற்றதாக எடுத்து கொள்ள வேண்டும்.இதே உச்சம் பெற்ற வீட்டிற்கு ஏழாவது வீட்டில் நீசம் அடைகிறது.இவ்வாறு நீசம் பெற்ற கிரகம் ஆனது நீச பங்கம் அடையாத நிலையில் பூஜ்யம் வலிமையை அடைகிறது.


  உச்சம் நிலைக்கு அடுத்த படியாக மூல திரிகோண நிலையில் எழுபத்தைந்து மதிப்பெண் நிலையினை அடைகிறது.


அடுத்தபடியாக ஆட்சி நிலையை அடைந்த கிரகம் ஐம்பது சதவீதம் மதிப்பெண் வலிமையை அடைகிறது.


 கிரகமானது நட்பு நிலையில் இருபத்தைந்து மதிப்பெண் வலிமையை அடைகிறது.


 நட்பு நிலைக்கு கீழ் வரும் போது அதாவது பகை நிலையை அடையும் போது கிரகமானது வலிமையை பத்து சதவீதம் அளவிற்கு  அடைகிறது.


 கிரக ஸ்தான வலிமையை நூறு சதவீத அளவில் வைத்து கணக்கிட்டு நிலையில் நீச பங்கம் அடைந்த கிரகம் ஆனது 120 மதிப்பெண் அளவிற்கு வலிமையை அடைந்த கிரகமாக விளங்குகிறது.


  இதே போல கிரக பார்வை பலத்தில் இயற்கை சுப கிரகமான குரு பகவான் எவ்வித பங்கமும் அடையாத நிலையிலும் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகிய இரு கிரகங்கள் பார்வை பலமானது முழுமையாக கொண்டு உள்ளது.


    இதில் இவ்விரு கிரகங்களின் சம சப்தம பார்வையானது ஒரு கிரகத்தின் மீது விழும் போது  தனக்கு எதிராக உள்ள கிரகத்தை நூறு சதவீத சுபத்துவ நிலையினை அடைய செய்கிறது.


  குரு மற்றும் வளர்பிறை சந்திரனுக்கு அடுத்த படியாக சுக்கிரன் மற்றும் தனித்த புதன் பகவான் பார்வை ஐம்பது சதவீதம் அளவிற்கு பார்வை மற்றும் சேர்க்கைகள் சுபத்துவ நிலையினை அடைய வைக்கிறது.


 எப்படி குரு பகவான் மற்றும் வளர்பிறை சந்திரன் தனது பார்வை பலத்தால் நூறு சதவீத சுபத்துவ நிலையினை அடைய செய்கிறதோ அதே போல் சனி பகவான் மற்றும் தேய்பிறை சந்திரன் தனது பார்வை பலத்தால் நூறு சதவீத பாவத்துவ நிலையினை அடைய வைக்கிறது..


 சனி பகவானுக்கு அடுத்த படியாக செவ்வாய் பகவான் முக்கால் பாவராக செயல்படுகிறார்.சூரியன் தன்னுடன் நெருக்கமாக உள்ள கிரகத்தை அஸ்தமனம் அடைய செய்து அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் பலனை தான் வாங்கி முழு பலமடைந்த கிரகமாக செயல்படுவார்.

சூரியன் பகவான் அரை பாவராக செயல்படுகிறார்.


     நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் ஜடப் பொருள் அல்லாத நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றிற்கு பார்வை கிடையாது.இவற்றிற்கு என சொந்த வீடும் கிடையாது.இவை இருக்கும் வீட்டின் அதிபதியை போல செயல்படுவார்.


நிழல் கிரகங்கள் இருக்கும் வீட்டின் அதிபதி,சேர்ந்து உள்ள கிரகம், பார்வை செய்யும் கிரகங்கள் மற்றும் அவை பெற்ற சார  நாதன் ஆகியவற்றை பொறுத்து அதன் பலம் அமைகிறது.


  ராகு பகவான் தன்னுடைய இணைந்த சுப  கிரகத்தினை  பாவத்துவம் அடைய செய்து தான் சுபத்துவம் அடைவார்.ராகு பகவான் பாவ கிரகமான சனி , செவ்வாய் மற்றும் தேய்பிறை சந்திரன் ஆகியவற்றுடன் இணைவு மற்றும் பார்வை கூடுதல் பாவத்துவ நிலையினை அடைவார்.இவைகள் சேர்ந்து இருக்கும் மற்றும் பார்க்கும் இடத்தை முழுவதும் பாதிப்பை அடைய செய்வார்.


  ஒரு சில கிரகங்கள் மட்டும்  சில இடங்களில் நிற்கும் போது திக் பலத்தை அடைகிறது.


  லக்னத்தில் குரு மற்றும் புதன் பகவான் அமரும் போது திக்பலத்தை அடைகிறது அதே நேரத்தில் அவை ஏழாம் இடத்தில் செல்லும் பொழுது நிஷ் பலத்தை அடைகிறது. அதாவது திக்பலத்தை இழந்த நிலையை அடைகிறது.


  நான்காம் இடத்தில் சந்திரனும் மற்றும் சுக்கிரனும் திக்பலத்தை அடைகிறது. அதே நேரத்தில் அவை பத்தாம் இடத்திற்கு செல்லும் பொழுது நிஷ் பலம் அடைகிறது.


    ஏழாமிடத்தில் சனி பகவான் திக்பலத்தை அடைகிறார். அதே நேரத்தில் லக்னத்தில் அவை நிஷ் பலத்தை அடைகிறது.


 பத்தாமிடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் திக்பலத்தை அடைகிறார். அவை  நான்காம் இடத்திற்கு வரும் பொழுது நிஷ்பலத்தை அடைகிறது.


இவ்வாறு திக் பலத்தை பெற்ற கிரகங்கள் ஸ்தான பலத்தை இழந்து நின்றாலும் அவை திக் பலத்தை பெறும் போது இழந்த வலிமையை மீண்டும் பெறுகிறது.


உதாரணமாக துலாம் லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் செவ்வாய் நீசம் பெற்றாலும் அவை திக் பலம் என்ற நிலையில் இழந்த வலிமையை மீண்டும் பெறுகிறது. இங்கு செவ்வாய் நீசம் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.


சில நேரங்களில் கிரகங்கள் பலம் இழந்து நின்றாலும் ராசியிலும் மற்றும் அம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்கும் பொழுது அவை வர்கோத்தமம் என்ற வகையில் வலிமை பெற்ற கிரகமாக கருதப்படுகிறது.


கிரகங்கள் தங்களது வீடுகளுக்குள் பரிமாறி நிற்பதை பரிவர்த்தனை யோகம் என்று கருதப்படுகிறது. இங்கு கிரகம் ஆட்சி பெற்ற நிலைக்கு சமமான நிலை பெறுகிறது.


 நீசம் பெற்ற கிரகங்கள் வர்கோத்தமம்  மற்றும் பரிவர்த்தனை பெற்றாலும் அவை நீசபங்கம் அடைகிறது.


 நீசம் பெற்ற கிரகத்தின் வீட்டில் ஒரு உச்சம் பெற்ற கிரகம் இருந்தாலும் நீசம் பெற்ற வீட்டின் அதிபதி ஏதேனும் ஒரு இடத்தில் உச்சம் பெற்று நின்றாலும் அவை நீச பங்கம் அடைகிறது.


நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று சந்திர கேந்திரத்தில் இருந்தால் அதை நீச பங்கராஜ யோகம் என்று பெயர். இங்கு உள்ள சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருந்தால் கூடுதல் நல்ல பலனை தரும். இவை உச்சத்தை விட கூடுதலான 120 மதிப்பெண்ணை பெற்றுள்ளது.


  நீசம் பெற்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டாலும் அவை நீசபங்கம் அடைந்ததாக  கருத்தில் கொள்ள வேண்டும்.


நன்றி


வாட்ஸ் அப் & கூகுள் பே & செல்

  097151 89647 

மற்றொரு செல்: 7402570899


        



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.


Email masterastroravi@gmail.com


நன்றி.

No comments: