Wednesday 19 April 2023

குளிகை என்றால் என்ன?

 குளிகை என்றால் என்ன?

      


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   குளிகை என்பது "காரிய விருத்தியை தரக்கூடிய காலம் "என்று சுக்ராச்சாரியார் கூறியுள்ளார். குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்த செயலும் காரிய விருத்தி தரும். 

.மேலும் மேலும் திரும்ப நடக்க வைக்கும். எனவே குளிகை நேரத்தில் சுப காரியங்கள் செய்யலாம்.


  இந்த குளிகை நேரத்தில் காரியங்கள் செய்தால் அவை திரும்ப,திரும்ப நடைபெறும் என்பதால் கெட்ட விஷயங்களை செய்ய கூடாது.

 அதாவது ஈம சடங்குகள்,  நோய்க்கு வைத்தியம் பார்க்க செல்லுதல்,

கடன் வாங்குதல், நிலம் விற்றல் மற்றும் வீடு உடைத்தல்  போன்ற திரும்ப நம் வாழ்வில் அடிக்கடி நடக்க கூடாத  காரியங்களை  செய்யக்கூடாது .


    ராகு மற்றும் எமகண்டம் போன்ற காலங்களில் சுப விஷயங்கள் செய்யக்கூடாது .ஆனால் குளிகை நேரத்தில் சுப காரியங்கள் செய்யலாம். கெட்ட விஷயங்கள் செய்யக்கூடாது.


  சூரியனுடைய மைந்தன் சனி பகவான், சனி பகவானுடைய மைந்தன் குளிகை ஆகும் .குளிகையின் மைந்தன் மாந்தி ஆவார்.


  குளிகை எப்படி பிறந்தது என்பதை புராண அடிப்படையில் இப்போது பார்ப்போம்.


  இலங்கை வேந்தன் ராவணனின் மனைவி மண்டோதரி கருவுற்றிருந்தாள் ஆதலால் 

ராவணன் தனது குல குருவான சுக்ராச்சாரியாரிடம் சென்று " யாராலும் வெல்ல முடியாத அழகும், அறிவும் நிறைந்த ஒரு பிள்ளை பிறக்க வேண்டும்" என்று வேண்டினார். அதற்கு அவரது குல குருவான சுக்ராச்சாரியார்

 " எல்லா கிரகங்களும் ஒரு கட்டத்தில் வரக்கூடிய நேரத்தில் குழந்தை பிறந்தால் நீ விரும்பிய படியே இந்த குழந்தை வளரும்" என்றார்.


  இராவணன் தனது தவ வலிமையால் எல்லா கிரகங்களையும் ஒரு அறையில் அடைத்து வைத்தார்.


 இத்தகைய செயலைக் கண்டு மனம் வெதும்பி என்ன நடக்க இருக்கிறதோ என்ற கவலையுடன் இந்த வழியினை சுட்டிக் காட்டிய சுக்ராச்சாரியாரிடம் கடிந்து கொண்டனர்.


  மண்டோதரியும் குழந்தை பிறக்க முடியாமல் வலியால் துடித்தால் அவளுக்கு குழந்தை பிறக்காமல் வலியால் துடித்ததால் ராவணன் தங்களை வந்து தண்டிக்கக்கூடும் என்று வருத்தம் அடைந்தனர்.


  உங்களுக்கு நிகரான வலிமை ஒத்த ஒரு கிரகத்தை சிருஷ்டிப்பதற்கான வழிமுறையை கூறினார்.இதனை சனியால் மட்டுமே செய்ய முடியும் என்றார்.

  சனிபகவான் தனது காந்த சக்தியால் சிறையில் இருந்தபடியே தனது மனைவியான ஜேஷ்டா தேவியை பார்த்து கர்ப்ப முற செய்தார் .அதன் விளைவாக" குளிகை" என்ற பிள்ளை பிறந்தான் .


   குளிகை பிறந்த அதே நேரத்தில் இராவணனுக்கும் ஒரு மகன் பிறந்தது அதற்கு" மேகநாதன்" என்று பெயரிட்டார். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நவக்கிரகங்களை விடுதலை செய்தார்.


   இதனால் மகிழ்ச்சி அடைந்த நவக்கிரகங்கள் குளிகையை கொண்டாடின.


   இந்தக் குளிகைக்கு  பகல்  ஒன்றரை மணி இரவு ஒன்றரை மணி நேரம் என்று ஒதுக்கினார்கள். அந்த நேரத்தில் செய்யப்படும் எந்த செயலும் காரிய விருத்தியை தரும் என்பது ஐதீகம் ஆகும்.


  எனவே காரிய விருத்தியை தரும் என்பதால் குளிகை நேரத்தில் மட்டும் பிறந்த நாள் விழா, திருமணம்,

சொத்து வாங்குதல், நகைகள் வாங்குதல் போன்ற சுப காரியங்கள் செய்யலாம்.


 எவையெல்லாம் வீட்டில் அடிக்கடி நடக்க கூடாது போன்ற செயல்களை குளிகை நேரத்தில் செய்யலாம்.அமங்கல விஷயங்கள் செய்ய கூடாது.


குளிகை நேரம்

(பகல் மற்றும் இரவு பொழுது)


ஞாயிறு பகல் 3.00-4.30, இரவு 09.-10.30


திங்கள் பகல் 01.30 -03.00 ,இரவு  7.30 -9.00


செவ்வாய் பகல் 12-1.30, இரவு 12-01.30


புதன் பகல் 10.30-12.00,இரவு 03.00.-4.30


வியாழன் பகல் 9.00-10.30 இரவு 1.30-3.00


வெள்ளி பகல் 7.30-9.00,இரவு 12.00 -1.30


சனி பகல் 6.00-7.30 , இரவு 10.30-12.00


  குளிகையை வழிபட சனிக்கிழமை மாலை சனீஸ்வரனை வழிபடலாம். சனீஸ்வரனை வழிபடும் போது மனதிற்குள் குளிகையை நினைத்துக் கொள்ள வேண்டும்.


  எந்த சுப விஷயங்கள் செய்யும் போதும் மனதிற்குள் குளிகையைநினைத்து ஆரம்பித்தால் அந்த காரியம் சித்தி அடையும், விருத்தி தரும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


  +91 97151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


              



அன்புடன்


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email masterastroravi@gmail.com

No comments: