Wednesday 19 April 2023

லக்கன சந்தி உதாரண ஜாதகம் விளக்கம்

 லக்கன சந்தி -உதாரண ஜாதகத்துடன் விளக்கம்

     



 செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


      துல்லியமாக பலன்களை கணிப்பதில் தவறு நிகழ்வதற்கு சில நேரங்களில் லக்கன சந்தியும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது என்பதை முன்னரே ஒரு பதிவில் விளக்கி இருந்தேன்.தற்போது இந்த பதிவில் ஒரு உதாரண  ஜாதகம் மூலமாக அந்த லக்கன செய்தியை உங்களுக்கு புரியும் படியாக விளக்கலாம் என்ற ஆர்வத்தில் இந்த பதிவுக்கு வந்துள்ளேன்.


 முதலில் லக்கன சந்தி என்பது என்ன என்பதை மீண்டும் ஒருமுறை விளக்குகிறேன். 24 மணி நேரம் கொண்ட ஒரு நாளில்ஜ்


 உத்தேசமாக இரண்டு மணி நேரத்துக்கு ஒரு லக்னம் மாறி வருகிறது.

இவ்வாறு மாறி வரக்கூடிய நேரங்களில் சில நேரங்களில் மட்டுமே  ஐந்து நிமிட வித்தியாசத்தில் கூட ஒரு லக்னத்தில் இருந்து அடுத்த லக்கினத்திற்கு மாறக்கூடிய அமைப்பில் சில பிறந்த நேரம் அமைந்து விடுவது  உண்டு.


 இவ்வாறு ஐந்து நிமிட வித்தியாசத்தில் லக்கனம் மாறி விடக்கூடிய சூழலில் பிறப்பவர்களுக்கு 

 பிறந்த நேரத்தை மிக துல்லியமாக மணி- நிமிடம் அளவில் குறித்து , அந்த துல்லியமான நேரத்தில் ஜாதகம் கணித்து எழுதினால் தான் ஜோதிடர்களால் தரக்கூடிய ஜோதிட பலன்களும் சரியாக துல்லியமாக அமையும்.


 நான் முன்னரே குறிப்பிட்டது போல 70's and 80 ' s ல் பிறந்தவர்களுக்கு எல்லோர் கையிலும் தற்போது உலாவி வரக்கூடிய அலைபேசி, கடிகாரம் கிடையாது.மேலும்  செவிலியர்களும் (nurse) குழந்தை பிறந்த சில நிமிடங்கள் கழித்து வந்து தான் குழந்தை பிறந்த விவரத்தை தருவார்கள்.


 பதிவில் குறிப்பிட்டது போல ஐந்து நிமிட வித்தியாசத்தில் லக்கனம் மாறக்கூடிய குழந்தைகளுக்கு உண்மையான பிறந்த லக்கனத்திலிருந்து அடுத்து வரும் லக்கனத்தை வைத்து கொண்டு பலன் தரும் நிர்பந்தம் வந்து விடுகிறது.


 இவை தவிர Rounded time  . குழந்தை பிறந்த நேரத்தை முழு எண்ணாக மாற்றி கொள்ளுவது .

அதாவது 7.56 am ஐ 8 .00 am மணி என்று குறிப்பதும் மற்றும் சில ஜோதிடர்கள் குழந்தை பிறந்த நேரத்தை ஆண் காலம்/பெண் காலம் அட்டவணையை பார்த்து பிறப்பு நேரத்தை மாற்றி ஜாதகம் எழுதுவதும் காரணமாக அமைந்து விடுவதாக முன் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.


   லக்கன சந்தியாக அமர்ந்தவர்களுக்கு எந்த வகையில் உண்மை லக்கனத்தை முடிவு செய்யலாம் என்பதை கீழே காணும் படிநிலை வழியாக ஆய்வுகள் செய்து திருத்தம் செய்யலாம்.


1) லக்கனம் மற்றும் லக்கனாதிபதி ஜாதகர் எவ்வகையான குணம் கொண்டவர் என்பதை காட்டி கொடுத்துவிடும்.


2) தசா புக்தி ஒரு மனிதன் வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்பவை.ஆதலால் லக்கனம் மாறும்போது ஆதிபத்தியம் மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.எனவே இதுவரை நடந்த தசா புக்தியில் நடந்த சம்பவங்களை குறித்த மற்றும் உண்மையான லக்னத்திற்கு ஆகிய இரண்டு வகைகளில் செய்து உண்மையான லக்கனத்தை தீர்மானிக்க இயலும். இரண்டு அடுத்தடுத்த லக்கனத்தில் எந்த லக்கனம் என்பதை கட்டாயம் முடிவு செய்துவிட  முடியும்.


உதாரண ஜாதகம் 


கீழ்க்கண்ட உதாரண ஜாதகம் லக்கன சந்தி பற்றி எனது கட்டுரை படித்துவிட்டு என்னிடம் பலன் பெற்று லக்கனத்தை மாற்றி கொண்ட ஜாதகம் ஆகும்.


 பிறந்த தேதி:  23 நவம்பர் 1967

பிறந்த நேரம்

   பெற்றோர்கள் குறித்து ஜாதகம் எழுதிய நேரம் 9.30 pm


  இதன் படி அவருக்கு

கடகம் லக்கனம் மற்றும் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம்


 ஆனால் கடகம் லக்கனமாக கொண்டு அவரது குணநலம்,அவர் பார்க்கும் வேலை மற்றும் அவருக்கு தொடர்ந்து வந்த தசாபுத்திகளை அவரது வாழ்வியல் சம்பவங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது துல்லியமாக வரவில்லை.


 பிறகு ஐந்து நிமிடத்துக்கு முன்பாக 9.25 pm என கணக்கிட்டால் அவருக்கு மிதுனம் லக்கனம் வருகிறது.


 மிதுனம் லக்கனம் மற்றும் கடக ராசி அடிப்படையில் குணநலன்கள் மற்றும் தசை புக்தி கொண்டு வாழ்வியல் சம்பவங்கள் மற்றும் அவர் செய்யும் பணி அனைத்தும் துல்லியமாக வந்தது.


  ஜாதகம் பார்க்க வந்தவருக்கும் ஜோதிட ஞானம் இருந்ததால் எளிதாக விளக்க நேர்ந்தது.மேலும் இவர் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.


   ஒருவர் ராசி லக்னத்திற்கு இரண்டு பத்தாம் இடங்களுடன் குரு  தொடர்பு கொள்ளும்போது சொல்லிக் கொடுக்கும் தொழில் அதாவது போதகர், ஆசிரியர் அல்லது கல்லூரி பேராசிரியராக இருப்பார்.


  மிதுன லக்கனப்படி


 மிதுனம் என்றால் அறிவு .


  மிதுனம் லக்கனத்திற்கு பத்தாம் இட அதிபதியாக குரு பகவான் வந்து ராசிக்கு இரண்டாம் இடத்தில் நிற்பது கல்லூரி பேராசிரியர்.


 அடுத்தபடியாக இவரது ஜாதகத்தில் புதன் பகவானே அதிக சுபத்துவமாகும். எவ்வாறு எனில் லக்கனாதிபதியும் சுகாதிபதியுமான புதன் பகவான் ஆனவர் புத்தி மற்றும் லக்கன யோகரான சுக்கிரன் பகவான் ஆகிய ‌இருவரும்  பரிவர்த்தனை அடைந்து ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதால்  புதன்  பகவான் சார்ந்த படிப்பான பொறியாளராகவும் மற்றும் கம்யூட்டர் அறிவு நிறைந்தவராகவும் உள்ளார். மேலும் ஜோதிட ஞானமிக்கவராகவும் உள்ளார். சந்திர கேந்திரத்தில் புதன் இருப்பது சோதிட அறிவை தரும்.


  மேற்கண்ட வகையில் ஆய்வுகள் செய்து பார்த்தது மட்டுமல்லாமல் தசை புக்தி அடிப்படையில் வாழ்வியல் சம்பவங்களும் மிதுனம் லக்கனம் என்பதை உறுதி செய்து அனுப்பி வைத்தேன்.


 மேற்கண்ட தகவல்கள் இது போன்ற அமைப்பில் பிறந்தவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் "கற்றதும் ,பெற்றதும் மற்றவருக்கே" என்ற வகையில் இந்த பதிவை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


  +91 97151 89647 


Email: masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


                    



 அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: