Tuesday 25 April 2023

சூரியன், புதன் மற்றும் சுக்கிரன்

சூரியன் -புதன்-சுக்கிரன்


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

         


   ஜோதிடத்தில் கோள்களில் தலைவன் என்று அழைக்கப்படுபவர் சூரிய பகவான்  ஆவார். சூரியனை மையமாக வைத்து எல்லா கோள்களும் சுழன்று வருகின்றன.


 சூரியன் ஒளி  கிரகமாகும்.ஆளுமை தன்மை வாய்ந்த ஆண் கிரகமாக திகழ்கிறது. லக்ன பாவகத்துக்கு காரகராவார். இதனை ஆத்மா காரகன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் தலைவனான தந்தைக்கு காரக கிரகமாக சூரிய பகவானை ஆவார். ஒருவர் ஜாதகத்தில் தந்தை மற்றும் தந்தை  வழி உறவுகளை பற்றி தெரிந்து கொள்ள சிம்மமும் அது அதிபதியான சூரிய பகவானும் மிக முக்கியமாக காரண கர்த்தாவாக திகழ்கிறார்.


 ஒருவர் ஜாதகத்தில் விதியும் (லக்கனமும்) ,  மதியும் (ராசியும் ) 

கெட்டு விட்டால் கதி என்று அழைக்கப்படும் சூரியனை மையமாக வைத்து சோதிட பலன் கணிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் சூரியனையே அதாவது  சூரியன் இருக்கும் இடத்தையே லக்னமாகக் கொண்டு ஜாதக பலன் கணிக்கப்படுகிறது.


  சூரியன் ,புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும்" மாத கிரகம்" என்று அழைக்கப்படுகிறது .அதாவது ஒரு ராசியை ஒரு மாத கால அளவு தங்கி இருக்கும் கிரகங்கள் ஆகும்.


   சித்திரை மாதத்தில் மேஷத்தில் தொடங்கி பங்குனி மாதம் மீனத்தில் வந்து சேர்கிறது..ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டு அவர் எந்த தமிழ் மாதத்தில் பிறந்திருப்பார் என்பதை சுலபமாக கணித்து விடலாம்.


  சூரியனை மிக அருகில் சுற்றி வரக்கூடிய கிரகம் சுக்கிரன் மற்றும் புதன் பகவான் ஆவார்.எனவே இவற்றை 

"உள் வட்ட கிரகம்" என்று அழைக்கிறோம்.

புதன் பகவான் சூரியனுடன் அல்லது சூரியனுக்கு முன்பின் ஒரு ராசிக்குள் மட்டுமே பிரேவேசம் செய்வார்.

 சுக்கிரன் பகவான் சூரியனுடன் சூரியனுக்கு முன்பின் இரண்டு ராசிகளுக்குள் வாசம் செய்வார்.பெரும்பாலான நேரங்களில் ஒரே ராசியில்  சூரியன், புதன்  மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் மட்டுமே அதிகமாக இணைந்த நிலையில் காணப்படும்.


     சுக்கிரனும் , புதனும்  உள்வட்ட கிரகம் என்பதால் சூரியனை நெருங்கும் போது அஸ்தமனம் மற்றும்  வக்கிரம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்திலும் மற்றும் தனித்தனியாகவும் அடைகிறது.


  சூரியனுக்கு ஐந்தாம் இடத்தில் சனி, செவ்வாய் மற்றும் குரு பகவான் வரும் போது வக்கிரம் ஆரம்பித்து ஒன்பதாம் இடத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறது.


   மகர லக்கனத்திற்கு சூரியன் பகவான் மட்டும் எட்டாம் இடத்தில் நின்றாலும் அஷ்டம தோஷம் கிடையாது.

  

    மாபெரும் சூரிய ஒளிக்கு முன்னால் குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் 8,11,13 ,15 ,17 பாகை அளவுகளில் நெருங்கும் போது அஸ்தமனம் அடைகிறது.


     வலிமை மற்றும் ஒளி மிகுந்த சூரியனின் வலிமையை குறைக்கும் தன்மை நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுகளுக்கு உண்டு. இவை சூரியனை அமாவாசை நேரத்தில் நெருங்கும்போது சூரிய கிரகணத்தையும் மற்றும் பௌர்ணமி நேரத்தில் நெருங்கும் போது சந்திர கிரகணத்தையும் தருகிறது.


 புதன் மற்றும் சுக்கிரன் பகவான் ஆகிய இரு கிரகங்களும் நெருக்கமாக சூரிய பகவானை நெருங்கி அஸ்தமனப்படுத்தும் பொழுது புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களின் பலனை சூரியன் தனது தசையில் தருகிறது.


 சூரியனால் அஸ்தங்கம் அடைந்த சுக்கிரன் மற்றும் புதன் பகவான் இழந்த வலுவை மீண்டும் பெற இயற்கை சுப கிரகமான குரு பார்வை , வளர்பிறை சந்திர கேந்திரத்தில் நிற்பது மற்றும் திக் பலம், உச்சம்,மூலதிரிகோணம் மற்றும் ஆட்சி போன்ற மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையினை அடையும் போது பெறுகிறது.


  சூரிய பகவானுடன் புதன் சேர்ந்து நிற்பது "புத ஆதித்ய யோகம் "ஆகும். சூரியனும் புதனும் சேர்ந்து எட்டு, நான்கு மற்றும் ஒன்று ஆகிய இடங்களில் சுபத்துவமான நிலையில் நிற்கும் பொழுது அரசனுக்கு நிகராகவ விளங்குவான்.


  சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்து நிற்பது தாம்பத்திய சுகத்தை கெடுக்கும்.


  சூரியன் புதன் சுக்கிரன் ஆகிய மூன்று முக்கூட்டு கிரகங்களும் ஒரு ராசியில் சேர்ந்து நிக்கும் பொழுது இயற்கை சுப கிரகமான குரு பகவான் பார்வை மற்றும் வளர்பிறை சந்திரன் கேந்திரத்தில் நிற்பின் அவரவர் லக்னத்தை பொறுத்து நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.மாறாக இயற்கை பாவ கிரகமான தேய்பிறை சந்திரன், சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் சேர்ந்து  நிற்கும் போது அல்லது சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் பார்வை செய்தாலோ லக்கனத்தை பொறுத்து கெடு பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


    சூரியன், புதன் ,சுக்கிரன் சேர்ந்து நிற்கும் போது தரக்கூடிய பலனை பார்க்க வேண்டும் எனில் அவரவர் லக்னத்தை பொறுத்து அவை தரும் பலனில் மாறுபாடு இருக்கும். மேலும் சுபத்துவ மற்றும் பாவத்துவ  நிலையை பொருத்தும் பலனில் மாறுபாடலாம்.


  மேஷ லக்னமாக இருந்து லக்னத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூவரும் சேர்ந்து இருப்பது இங்கு சூரியன் உச்சம், புதனுக்கு அந்த வீடு பகை வீடு மேலும் 3 மற்றும் 6 க்குடைய அவ யோகி ஆவார் .சுக்கிரன் 2 மற்றும் 7 கூடியவர் ஆவார்.


 மேஷ லக்னத்தில் இந்த முக்கூட்டு கிரகம் நன்மையை பயக்க அவர் சித்ரா பௌர்ணமியில் அல்லது பொளர்ணமியை நெருங்கும் அல்லது விட்டு விலகிய நிலையில் இருப்பின் நல்ல பலனைத் தரும்.


  சூரியன் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்து நிற்பது என்பது அவரவர் லக்னத்தில் அடிப்படையில் வைத்து பலன் அமையும்.பலன் தரும் தன்மை மாறுபடும்.


 சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் பத்தாமிடத்தில் இருக்கும் பொழுது இயற்கை சுப கிரகமான குரு பகவானோ அல்லது வளர்பிறைச்சந்திரன் கேந்திரத்தில் அதாவது பௌர்ணமி  அமைப்பில் இருக்கும் பொழுது பிறந்த சாதகர் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவார்.


    மேஷம் மற்றும் ரிஷப லக்னங்களுக்கு பத்தாம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சேர்ந்து நிற்பது என்பது புதன் மற்றும் சுக்கிரனுக்கு அது நட்பு வீடாக இருந்தாலும் சூரியனுக்கு இருள் கிரகமான சனி வீடு பகை வீடு என்பதால் மிகுந்த நல்ல பலனை தருவதில்லை. மாறாக பௌர்ணமி யோகத்திலோ அல்லது குரு பகவான் பார்வையில்  இருக்கக்கூடிய அமைப்பில் நல்ல பலனை தரக் கூடிய வகையில் இருக்கும்.


தனுசு லக்கனமாக இருந்து பத்தாமிடத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து நிற்பது ஒன்பது மற்றும் 10க்குடையவர் சேர்ந்து இருப்பது கர்ம கர்மாதிபதி யோகம் என்றாலும் கூட பத்தாம் இடத்தில் புதன் இருப்பது சில நேரங்களில் கேந்திர ஆதிபத்திய தோஷம் என்ற வகையில் சிறிது பலத்தை இழக்க நேரிடும். இங்கு சூரியனும் புதனும் பரிவர்த்தனை பெற்ற நிலையில் இருக்கும் போது கூடுதலான பலனை தரும்.


 மிதுன லக்னமாக இருந்து பத்தாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் சேர்ந்திருப்பது மிகுந்த யோகத்தை சாதகருக்கு கொடுக்கும். அரசின் உயரிய பதவிகளையோ அல்லது எழுத்து, சோதிடம் இது போன்ற துறைகளில் இணைய வழி பொருளீட்டல் போன்ற வகையில் மல்டிபிள் டேலண்டராக சாதகர் இருப்பார்.


 கடக லக்கனத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து நிற்பது இங்கு சூரியன் உச்சம் மற்றும் திக் பலம் பெற்ற நிலையில்  வலுப்பெற்ற நிலையில் இதுவே சித்ரா பௌர்ணமியாக இருக்கும் போது அரசின் உயரிய பதவி அல்லது அரசியலில் உயரிய பதவி கிடைக்கும்.


சிம்மம் லக்கனமாக இருந்து பத்தாம் இடத்தில் சூரியன் புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து நிற்பது சூரியன் திக் பலம், சுக்கிரன் ஆட்சி மற்றும் புதன் நட்பு போன்ற நிலைகளில் முக்கூட்டு கிரகங்கள் வலுப்பெற்று ஜாதகர் அரசின் உயரிய அல்லது அரசியலில் ஆட்சி கட்டிலில் அமரும் யோகம் ஜாதகருக்கு உண்டாகும்.


கன்னி லக்கினத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து நிற்பது நல்ல பலனை சுபத்துவ நிலையில் இருக்கும் போது நல்ல பலனைத் தருகிறது.


துலாம் லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் அதாவது கடக வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்து நின்று நல்ல பலனை தர வேண்டும் எனில் வீடு கொடுத்த சந்திரன் நல்ல ஸ்தான வலிமையை இழந்த நிலையில் அல்லது தேய்பிறை சந்திரனாகவோ இருக்க கூடாது.


 விருச்சிக லக்னத்திற்கு பத்தாம் இடத்தில்  சிம்மம்  வீட்டில் சூரியன் (ஆட்சி), புதன் (அதி நட்பு)  , சுக்கிரன் (பகை)  சேர்ந்து இருப்பது மிகப்பெரிய நல்ல யோகத்தை தருகிறது .அதாவது அரசாங்கத்தில் மற்றும் அரசியலில் உயரிய பதவியை சுப கிரக தொடர்பு ஏற்படும் போது ஜாதகருக்கு கொடுக்கிறது.


 மகர வீட்டிற்கு பத்தாம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சேர்ந்திருப்பதும் இங்கு துலா வீட்டில் சுக்கிரன் ஆட்சி என்ற நிலையிலும் சூரியன் நீசமாகி பங்கம் அடைவதால் புதன் அந்த வீட்டுக்கு நட்பு என்ற வகையில் மூவரும் சேர்ந்து சுபத்துவமான நிலையில் நல்ல யோக பலனை சாதகருக்கு கொடுக்கும்.


  கும்ப வீட்டிற்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் விருச்சிக வீட்டில் சேர்ந்து நிற்பது இங்கு சூரியன் மட்டும் நட்பு பெற்ற நிலையில் புதன் மற்றும் சுக்கிரனுக்கு எதிர் தன்மையான வீடு என்ற வகையில் சுபத்துவ நிலையை அடையும் போது மட்டும் நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் இருக்கும்.


 மீனம் வீட்டிற்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் குருமனை ஏறி நின்று குருவால் பார்க்கக்கூடிய நிலையில் அரசின் மற்றும் அரசியலின் உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகமும், போதகர், பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் ஆசிரியர் போன்ற துறைகளில் ஈடுபட வைக்கும்.


இதை அடிப்படையில் மேஷத்திலிருந்து மீனம் வரை எல்லா ஸ்தானங்களுக்கும் பலன் பார்க்க ஆரம்பித்தால் பதிவு நீண்டு கொண்டே போகும் என்பதால் மேற்கண்ட உதாரணம் அமைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு   லக்கனத்திலிருந்து பன்னிரண்டாம் வீடு வரை சூரியன்,சுக்கிரன்,புதன் சேர்ந்து நின்றால் தரும் பலனை  பார்க்க பழகிக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல் 7402570899


Email ; masterastroravi@gmail.com


         


அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: