Wednesday 19 April 2023

சுகம் அடையும் யோகம் யார் மூலமாக அமையும்?

 சுகம் அடையும் யோகம் யார் மூலமாக அமையும்?





  செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவருடைய ஜாதகத்தில் எல்லா நிலைகளும் கெட்டுவிட்டாலும்,

 சுக ஸ்தானமான நான்காம் இடமும், அதன் அதிபதியும் வலுப்பெற்று நின்றால் அவர் எந்த வகையிலாவது தன் வாழ்வில் ஜீவிதம் பண்ணக்கூடிய சுகத்தை கட்டாயம் அடைந்தே தீருவார்.


    அவர் அந்த சுகத்தை யார் மூலம் அடைவார் என்பதை அவருடைய ஜாதகத்தில் அந்த சுகாதிபதி வலுவை பொறுத்தும் மற்றும் அவை கொண்ட தொடர்பினை பொறுத்து அமையும்.


  இந்த கருத்தை வலியுறுத்தக்கூடிய ஒரு உதாரண ஜாதகத்தை எடுத்துக்கொண்டு விளக்கலாம் என்ற ஆர்வத்தில் இந்த பதிவுக்கு வந்துள்ளேன்.


பிறந்த தேதி: 16.09.1971

பிறந்த நேரம்: 11.20 pm

பிறந்த இடம்: சென்னை


    பிறந்த நட்சத்திரம்:  ஆயில்யம் நான்காம் பாதம்

புதன் தசை ஜெனன கால தசை இருப்பு : 

   2 ஆண்டு 04 மாதங்கள் 08 நாட்கள்


   ஜாதகத்தில் ரிஷப லக்கனம் ,கடக ராசி மற்றும் ஆயில்ய நட்சத்திரமாகும்.


    இவரது ஜாதகத்தில் லக்னத்தில் சனி பகவான் அமர்ந்து லக்கனாதிபதியான சுக்கிரன் நீசம் அடைந்து இருந்தாலும் லக்னத்தை குரு பார்ப்பதால் வாழ தகுதியானவராக உள்ளார். மேலும் லக்னத்திற்கு ஆத்மா காரகரான சூரிய பகவான் ஆட்சி பெற்ற நிலையில் உள்ளார்.


  இயற்கை பாவ கிரகமான மற்றும் இருள் கிரகமான சனி பகவான் லக்னத்தில் அமர்ந்து லக்கனத்தை கெடுத்ததோடு மட்டுமல்லாமல் லக்கணாதிபதியுமான சுக்கிரன் நீசம் அடைந்து விட்டார். லக்னத்தில் அமைந்த சனி பகவான் தன்னுடைய மூன்றாவது பார்வையால் ராசியையும் பார்த்து பாவத்துவம் அடைய வைத்து விட்டார். ராசியை சனி பார்த்தது மட்டுமல்லாமல் ராகுவுடன் நெருக்கமாக இணைந்து உச்சம் பெற்ற நிலையில் உள்ள செவ்வாய் பகவானும் பார்வை செய்துள்ள நிலையில் ராசியும் மற்றும் ராசி நாதனுமான சந்திரனும் கூடுதல் பாவத்துவம் அடைந்து விடாடார்கள்.

உயிர் ,உடல் என்று சொல்லக்கூடிய லக்கனம் மற்றும் ராசி இரண்டும் கெட்டுவிட்டார் .இப்படி உள்ள சூழ்நிலையில் இவர் நிச்சயமாக வாழ தகுதியற்றவராக சோம்பேறியாக, சுறுசுறுப்பு இல்லாதவராக, குள்ளத்தன்மை கொண்டவராக மற்றும் பொறாமைக்காரராக இருந்திருக்க வேண்டும்.


 ஆனால் மேற்குறிப்பிட்ட அத்தனை நிலையினையும் ஏழாம் இடத்தில் அமர்ந்த குரு பகவான் தனது பார்வையின் மூலமாக ஓரளவு தடுத்தி நிறுத்தி விட்டார்.

     மேலும்  ஏழாம் இடத்தில் அமர்ந்து லக்கனத்தையும் ,லக்கனத்தில் உள்ள சனி பகவானையும் பார்த்து சுபத்துவ படுத்திய நிலையில் குரு பகவான் பார்வை செய்த சனி பகவான் தனது தீய சக்தி வடிகட்டப்பட்ட நிலையில் குரு பார்த்த சனியின் பார்வை ராசியையும் மற்றும் ராசி அதிபதி சந்திரனையும் பாவத்துவ படுத்த இயலாது.


 இவருக்கு என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது 52 வது வயது நடந்து கொண்டிருந்தது.இவருக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை இதற்கான சாதக விளக்கத்தை பார்ப்போம்.


 பொதுவாக திருமண ஸ்தானமான லக்கனம், இரண்டாம் இடமான குடும்பஸ்தானம், ஏழாமிடமான களத்திர ஸ்தானம் மற்றும் எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானம் ஆகியவற்றில் சனி, செவ்வாய், ராகு  மற்றும் கேது இருப்பதும் அல்லது சனி, செவ்வாய் போன்ற பாவக்கிரகங்கள் பார்ப்பதும் காலதாமத திருமணத்தை கொடுக்கும். இவை மட்டுமல்லாது களத்திரகாரகன் சுக்கிரனுடைய நிலையையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


 இவரது ஜாதகத்தில் லக்னத்தில் சனி அமர்ந்து லக்கன பாவத்தையும்,அவை ஏழாம் இடத்தை பார்த்து களத்திர ஸ்தானத்தையும் பாவத்துவமடைய செய்துள்ளது. களத்திரச் சானாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று ராகுவோடு இணைந்து மிகுந்த பாவத்துடன் அடைந்துள்ளது. காரகன் சுக்கிரனும் நீசம் அடைந்து விட்டார்.


  ராசியை சனி மூன்றாம் பார்வையாக பார்த்து ராசிக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் ராகு இணைந்து மற்றும் ராசிக்கு  எட்டாம் இடத்தை சனி பகவான் தனது பத்தாவது பார்வையால் பார்த்து உள்ளார்.


  இது போன்ற அமைப்புகளால் இவருக்கு இதுவரை திருமணம் நடக்காமல் காலதாமதம் ஆயிக் கொண்டே செல்கிறது.


ஏழாம் இடத்தில் அமர்ந்த குரு பகவான் தனது பார்வையால் சனியையும் ராசியையும் சுபத்துவப்படுத்தி இருப்பதால் நிச்சயமாக இவருக்கு திருமணம் உண்டு.


 இவருக்கு திருமணம் செய்ய உகந்த வயதான 29 வயதிலிருந்து தொடர்ந்து லக்கன அவயோக தசைகளான  சூரிய, சந்திர மற்றும் செவ்வாய் தசை தொடர்ந்து 23 ஆண்டுள்  நடந்து கொண்டு இருப்பதாலும் திருமணம் செய்வதற்கு தசாபுத்தியும் தொடர்ந்து ஒத்துழைக்கவில்லை.


இன்னும் ஒரு ஆண்டு கழித்து வரக்கூடிய ராகு தசையும் சனியுடைய வீட்டில் அமர்ந்து உச்சம் பெற்ற செவ்வாயுடன் நெருக்கமாக ஒரே நட்சத்திர பாதத்தில் அமர்ந்திருப்பதால் ராகு தசையில் திருமணம் செய்வதும் மிகப் பெரிய சவாலாகவே அமையும்.


 அதனால் இவருக்கு ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்ட பெண்ணாக விதவையாகவோ அல்லது இரண்டாம் திருமண அல்லது காலதாமதமாக திருமணம் செய்யக்கூடிய ஒரு பெண்ணை தேர்வு செய்து மாங்கல்யம் கட்டாமல் மாலை மாற்றிக் கொள்ள ஆலோசனை செய்து அனுப்பினேன்.


  இவருக்கு தொடர்ந்து அதாவது பிறந்தவுடன் புதன் திசை இரண்டு ஆண்டுகள் நான்கு மாதம் எட்டு நாட்கள் வரை நடந்த நிலையில் நல்ல அரசு வேலை பார்க்கும் அம்மாவின் வயிற்றில் பிறந்து உள்ளார்.


 அடுத்தபடியாக தொடர்ந்து வரக்கூடிய கேது தசை ஏழு ஆண்டுகள் அடுத்தபடியாக வந்த சுக்கிர திசை அதுவும் நீசம் பெற்ற நிலையில் முதல் ஒரு சில ஆண்டுகள் நல்லபடியாக அமைந்ததால் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயின்ற நிலை இவருக்கு தந்தது.


 சுக்கிர திசையின் பின்பகுதியில் இருந்து சுக்கிரன் ஆறாம் அதிபதியாகவும் செயல்பட்டு இவரது படிப்பை தடை செய்ய வைத்தது இதனைத் தொடர்ந்து லக்னாதிபதி சுக்கிரனுக்கு மற்றும் சுக்கிரன் அணியை சேர்ந்தவர்களுக்கும் வரக்கூடாத தசைகள் என்று அடிக்கடி நான் சொல்லக்கூடிய சூரிய ,சந்திர  மற்றும் செவ்வாய் தசைகள் தொடர்ந்து வந்ததால் இவருக்கு இந்த வயது வரை முறையான சம்பாத்தியம் இல்லை.


  "பல கதவை அடைத்தாலும் இறைவன் ஏதாவது ஒரு கதவை திறந்து வைப்பார்" என்ற வகையில் இவரது ஜாதகத்தில் சுகத்துக்கு அதிபதியான சூரிய பகவான் ஆட்சி பெற்ற நிலையிலும் அதனுடன் இரண்டு ஐந்துக்குரிய அதி நட்பு கிரகமான  புதன் பகவான் இணைந்து நிலையிலும் மற்றும் நான்காம் அதிபதி சந்திரனும் ஆட்சி பெற்று குரு பகவானால் பார்க்கப்பட்ட நிலையில் சந்திரனை சனி பார்த்தாலும் குரு பார்த்த சனி என்பதாலும் , மேலும் செவ்வாய் பகவான் பார்வை சந்திரனுக்கு நட்பு கிரகம் என்ற வகையில் பெரிய அளவு பாதிப்பை தந்து விடாது. எனவே நான்காம் இடமும் அது அதிபதியான சந்திரனும் ஆட்சி பெற்று சுபத்துவமான நிலையில் இருப்பதால் இவரது அம்மாவின் பென்ஷன் பணத்தில் இதுவரை  செலவு செய்து கொண்டிருக்கிறார்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  +91 97151 89647 


மற்றும் ஒரு செல் 7402570898


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம், மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

      



அன்புடன்

   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி,

 புதுக்கோட்டை மாவட்டம்.


My email;  masterastroravi@gmail.com

No comments: