Tuesday 25 April 2023

துலாம் ♎ முதல் மீனம் வரை யோகத்தை அள்ளித் தரும் தசைகள்

 துலாம் முதல் மீனம் வரை யோகத்தை அள்ளித் தரும் தசைகள்.

               


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர்  வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வது அவருக்கு நடக்க கூடிய தசா புத்திகளே ஆகும்.


 ஒருவர் ஜாதகத்தில் யோக தசைகள் தான்  நல்லது தரும் என்றும் அவ யோக தசைகள் கெட்டதை தரும் என்றும் உறுதியாக  கூறிவிட முடியாது.


  ஒரு சிலருக்கு லக்கன அவயோக தசைகள் உப ஜெய ஸ்தானமான மூன்று, ஆறு ,பத்து  மற்றும் பதினொன்றில் நட்பு நிலை நின்று சுபத்துவமான நிலையில் இருக்க அதிக நல்ல பலனை தந்து விடுவது உண்டு. அதேபோல லக்கன யோகராக கருதக்கூடியவை பாவ கிரகங்கள் உடன் சேர்ந்து பாவத்துவமான நிலையில் இருக்க அந்த யோக தசையே கெட்ட பலனை  தந்து விடுவது உண்டு.


 துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் ,சனி மற்றும் புதன் தசைகள் யோகத்தை அள்ளித் தரும் தசைகளாக விளங்குகிறது.அதே நேரத்தில் குரு, சூரிய ,சந்திர  மற்றும் செவ்வாய் தசைகள் எதிர் தன்மை உடைய தசைகளாக கருதப்படுகிறது. நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் சுக்கிரன் அணியை சேர்ந்த ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி , மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் நிற்க அதன் தசை காலங்களில் யோகத்தை அள்ளித் தருகிறது. துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் மிகுந்த யோகத்தை தர வேண்டுமாயின் அஷ்டமஸ்தானமான எட்டாம் இடத்தில் நிற்காமல் லக்னத்தில் நின்றால் மிகுந்த நல்ல பலனை தருகிறது. துலா லக்னத்திற்கு முக்கியமாக குரு தசையே அவயோக தசையாகும்.


 விருச்சிகம் லக்னத்திற்கு செவ்வாய் குரு சந்திரன் சூரியன் ஆகியவை யோக தசைகளாக கருதப்படுகிறது சுக்கிரன் புதன் சனி ஆகியவை  எதிர் அணி  தசைகளாக கருதப்படுகிறது. பொதுவாக விருட்சகத்திற்கு புதன் திசையை அவயோகத் தசையாக கருதப்படுகிறது.

செவ்வாய் பகவான் லக்னத்திற்கும் ஆறாம் இடத்திற்கும் அதிபதியாக வருவதால் லக்னத்தில் பாவ கிரகங்கள் இருக்கக் கூடாது என்ற நிலையில் லக்கினத்திற்கு ஆறாம் இடமான இடத்தில் ஆட்சி பெற்று இருப்பது ஒரளவு நல்லது.


 விருச்சிக லக்னத்திற்கு லக்ன யோக அல்லது அவயோக தசையாக இருந்தாலும் அல்லது மறைவிடங்களில் நின்றாலும் இயற்கை சுப கிரகமான குரு  வளர்பிறைச்சந்திரன்,பாவியோடு சேராத தனித்த புதன்  மற்றும் சுக்கிரன் ஆகிய தொடர்பு வரும்பொழுது அவை யோக தசையாக மாறி நல்ல பலனைத் தருகிறது.


 விருச்சிக லக்னத்தை பொருத்தவரை தர்ம கர்மாதிபதிகள் என்று சொல்லக்கூடிய சூரியன் மற்றும் சந்திரன் பௌர்ணமி யோகத்தில் அமர்ந்து அதன்  தசை நடத்தும் பொழுது பௌர்ணமி யோகம் மற்றும் தர்ம-கர்மாதிபதிகள் சம சப்தமாக  தொடர்பு பெற்று அரசு கட்டிலில் அல்லது ஆட்சி கட்டிலில் அல்லது அரசாங்கத்தின் உயரிய பதவி இல்ல அபரவக்கிறது.


 தனுசு லக்னத்திற்கு குரு, 

வளர் பிறைச்சந்திரன், சூரியன் மற்றும் செவ்வாய் ஆகியவை இலக்கண யோக தசையாக கருதப்படுகிறது.உபய லக்கனத்திற்கு சுப கிரகங்கள் கேந்திரத்தில் அமர்வது கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தந்து விடுவதுண்டு. அந்த வகையில் குரு பகவான் நான்காம் இடமான மீனத்தில் அமராமல் லக்னத்தில் அமர்ந்து இருப்பது கேந்திர ஆதிபத்தியம் தோஷத்திலிருந்து விலக வைத்து விடும்.

சுக்கிரன் புதன் சனி தசைகள் எதிரணியை சேர்ந்த தசையாக கருதப்படுகிறது .பொதுவாக தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் மற்றும் புதன் தசைகள் அவையக தசையாக கருதப்படுகிறது.ராகு மற்றும் கேது பகவான் குரு அணியை  சேர்ந்த தனுசு, மீனம்,மேஷம், விருச்சகம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய லக்னங்களில் இருந்தால் அதன் தசை காலங்களில் யோகத்தை அளித்த தரும்.


மகர லக்கனத்திற்கு சுக்கிரன், புதன் மற்றும் சனி தசைகள் பாவ கிரகங்களுடன் சேராமல் நல்ல ஸ்தான வலிமையை பெற்று நிற்கும்போது சாதகருக்கு யோகத்தை அள்ளித் தருகிறது. சூரியன் சந்திரன் செவ்வாய் மற்றும் குரு ஆகியவை எதிரணியை சேர்ந்த தசைகள் ஆகும்.இங்கு சனிக்கு குரு சம தன்மை பெற்ற கிரகம் என்பதால் குரு தசையில் பெரிய அளவுக்கு பாதிப்பு நடந்துவிடும் தில்லை. பொதுவாக மகர லக்கினத்திற்கு சூரிய தசை ஆகாத தசையாகும்.ராகு மற்றும் கேது சுக்கிரன் அணியை சேர்ந்த ராசியில் நிற்கும் போது நல்ல பலனைத் தருகிறது.


 கும்பம் லக்கனத்திற்கு சுக்கிரன், புதன் மற்றும் சனி தசைகள் நல்ல ஸ்தான வலிமையை பெற்று சுபத்துவமான நிலையில் நிற்கும் பொழுது அதிக அளவில் நல்ல யோக பலனை லக்கனாதிபதியின் வலிமையை பொறுத்து தருகிறது. சூரிய சந்திர செவ்வாய் மற்றும் குரு தசைகள் எதிர் தன்மையை கொண்ட தசையாக கருதப்படுகிறது. பொதுவாக கும்ப லக்னத்திற்கு ஆறாம் அதிபதியான சந்திர தசை அவயோக தசையாகும்.

நிழல் கிரகங்கள் சுக்கிரன் அணியை சேர்ந்த ராசிகளில் நிற்கும் போது நல்ல பலனைத் தருகிறது.


 மீன் லக்னத்திற்கு குரு, சூரிய, சந்திரன் மற்றும் செவ்வாய் தசைகள் யோகத்தை அள்ளித் தரும் தசையாக கருதப்படுகிறது இங்கு சூரிய தசை ஆறாம் அதிபதி தசை என்பதால்  யோக பலனை தந்து விடுவதில்லை.சுக்கிரன், புதன் மற்றும் சனி தசைகள் எதிர் அணியை சேர்ந்த தசைகளாகும். மீன லக்னத்திற்கு சுக்கிர தசை அவ யோகத் தசையாக கருதப்படுகிறது.


நன்றி


Cell & What's app & Google pay

  097151 89647 


My another cell no : 7402570899


My email: masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                     


அன்புடன்


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: