Monday 24 April 2023

கூட்டு கிரகங்கள் -ஜாதகத்தில் பலன் எடுப்பது எப்படி?

 

              

கூட்டு கிரகங்கள் -ஜாதகத்தில் பலன் எடுப்பது எப்படி?


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    ஒரு ஜாதகத்தில் கூட்டு கிரகங்கள் இடம் பெறும் போது பலன் காண்பது மிகவும் நுணுக்கமாக கவனித்து பலன் கூற வேண்டும்.


  நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு ராசியில் இடம் பெற்றிருக்கும் போது இவற்றிற்கு பலன் கூற முற்படும் போது அந்த கிரகங்களுக்கு இடைப்பட்ட உறவு நிலைகளையும் மற்றும் அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் பெற்றுள்ள டிகிரி அளவினையும் கவனிக்க வேண்டும்.


 இணைந்து உள்ள இரு கிரகங்கள் எட்டு பாகைக்குள்ளாக இருந்தால் மிகவும் நெருக்கமாக உள்ளது என்று அர்த்தம் ஆகும்.இவை தன்னுடன் இணைந்த கிரகத்தை 100 % சதவீதம் பாதிக்கும்.13 பாகைக்கு உள்ளாக இருப்பின் 50 % சதவீத அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். 22 பாகைக்கு மேல் இருந்தால் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை.அவை தன்னுடன் இணைந்த கிரகத்தை எவ்வித பங்கத்திற்கும் உள்ளாக்குவதில்லை..


சூரியன் பகவானை எட்டு பாகைக்குள்ளாக நெருங்கும் கிரகங்கள் அஸ்தமனம் அடைந்து விடுகிறது.இவ்வாறு அஸ்தமனம் பெற்ற கிரகங்கள் வலிமை இழந்த கிரகமாக கருதப்படுகிறது.வலிமை இழந்த கிரகங்களின் பலனை சூரியன் தனது தசையில் தருகிறது.


இவ்வாறு வலிமை இழந்த கிரகங்கள் திக் பலம் பெறும் போது அல்லது ஸ்தான வலிமை பெறும்போது அல்லது சுபர் பார்வை படும் போதோ கிரகங்கள் இழந்த வலுவை மீண்டும் பெறுகிறது.


 லக்கனம் மற்றும் அதன் அதிபதியின் வலிமை கணக்கிட வேண்டும்.லக்கனாத்தின் அடிப்படையில் நன்மை தரக்கூடிய கிரகங்களா அல்லது கெடு பலன்களை தரக் கூடிய கிரகங்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.


எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ராசியில் ஐந்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்த நிலையில் இயற்கை சுப கிரகங்கள் அல்லது இயற்கை பாவ கிரகங்கள் மற்றும் லக்கன யோகி அல்லது அவயோகி போன்ற விவரங்களையும் கவனிக்க வேண்டும்.


பெரும்பாலும் சூரியனை ஒட்டியும்  முன்பின் ஒரு ராசிகள் தள்ளி புதன் பகவானும் மற்றும் சுக்கிரன் பகவான் சூரியனை ஒட்டியும்  முன்பின் இரண்டு ராசிகள் தள்ளியும் சுக்கிரன் பகவான் இருக்கும்.எனவே பெரும்பாலும் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் முக்கூட்டு கிரகங்கள் என்பதால் இம்மூன்று கிரகங்களும்  பெரும்பாலும் ஒரு ராசியில் இணைந்த நிலையில் காணப்படும்.


 ஒரு ராசியில் இயற்கை சுப கிரகங்கள் உடன்  சனி செவ்வாய்,,ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் இணைந்த நிலையில் எந்த பாவ கிரகம் நெருக்கமாக இணைந்த நிலையில் உள்ளது.எந்த கிரகம் சுப கிரகத்தை விட்டு விலகி உள்ளது போன்ற விவரங்களை கவனித்து பலன் எடுக்க வேண்டும்.


  ஒரு ராசியில் மேற்குறிப்பிட்ட அத்தனை பாவ கிரகங்கள் இணைந்து அந்த பாவகத்தையும் மற்றும் அதில் இணைந்து உள்ள லக்கன யோகி மற்றும் சுப கிரகங்களையும் பாவத்துவ நிலைக்கு உட்படுத்தினாலும் ஒற்றை பங்கப்படாத குரு பகவான் பார்வை ஒட்டு மொத்தமாக சுபத்துவ படுத்தி நல்ல பலனை தர வைத்து விடும்.அதே நேரத்தில் ஒற்றை சனியின்  பார்வை ஒட்டுமொத்தமாக  பாவத்துவ படுத்தி விடுகிறது.


 கிரகங்கள் இணைந்த வீட்டின் வலிமையை கவனிக்க வேண்டும். இணைந்த வீட்டின் அதிபதி உச்சம் அல்லது ஆட்சி‌ போன்ற நிலையில் பலம்  பெற்றிருக்கும் போது வீடு கொடுத்தவன் வலுவின் அடிப்படையில் அந்த கிரகம் நல்ல பலனை தரக்கூடிய அமைப்பை பெறுகிறது.


 சில நேரங்களில் ஒரு ராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட பாவ கிரகங்கள் தொடக்க அல்லது இருபத்து எட்டு பாகைக்கு மேலாக நிற்கும் அதற்கு முன் அல்லது பின் உள்ள ராசியில் உள்ள பாவ கிரகங்கள் அதிக பாவத்துவ  அல்லது சுபத்துவ படுத்தி விடுகிறது.

உதாரணமாக கடக ராசியில் தொடக்க இரண்டு அல்லது மூன்று பாகைக்குள் சனி, செவ்வாய் மற்றும் ராகு பகவான் நின்று உள்ள நிலையில் மிதுனம் வீட்டில் இருபத்து ஒன்பதாம் பாகையில் உள்ள இயற்கை சுப கிரகம் அடுத்த ராசியில் உள்ள கிரகங்களை சுபத்துவ படுத்தி விடுகிறது.


இதேபோல கடக வீட்டில் இருபத்து எட்டு அல்லது இருபத்து ஒன்பதாம் பாகையில் உள்ள செவ்வாய்,ராகு மற்றும் தேய்பிறை சந்திரனை சிம்ம வீட்டில் தொடக்க இரண்டு பாகைக்குள் உள்ள சனி பகவான் அடுத்த ராசியில் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக பாவத்துவ படுத்தி அதன் தசையில் கெடு பலன்களை தருகிறது.


 இவ்வாறு பல வகையில் ஆய்வு செய்த பின்பு பலன் எடுக்க விரும்பும் கிரகமானது அம்சத்திலும் சுப வர்க்கம் ஏறி உள்ளதா ? பாவ வர்க்கம் ஏறி உள்ளதா? என்பதை கவனத்தில் கொள்க வேண்டும்.


  ஒரு குறிப்பிட்ட பலனை எடுக்க மூன்று வகையில் ஆய்வு செய்ய வேண்டும்.அதாவது பாவகம்,பாவக அதிபதி மற்றும் அதன் கார்கள் ஆகிய மூன்று வகையில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


எனவே திருமண 💒 ஸ்தானமான ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய்‌ மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்கள் இணைந்து நிற்கும் போது ஏழாம் பாவகம் மற்றும் லக்கன பாவகம் கெடுதல் அடைந்து விட்ட நிலையில் திருமணமே நடக்காது என்று முடிவுக்கு உடனே வந்து விட கூடாது.ஏழாம் இடத்தை பாவத்துவ படுத்தி இருந்தாலும் ஏழாமிட அதிபதி மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ஆகிய இரண்டையும் ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்; 7402570899


Email masterastroravi@gmail.com

       



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: