Wednesday 19 April 2023

மேஷம் முதல் கன்னி வரை யோகத்தை அள்ளித் தரும் தசைகள்.

 மேஷம் முதல் கன்னி வரை யோகத்தை அள்ளித் தரும் தசைகள்.

      


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவரது ஜாதகத்தில் யோகத்தை மிகுதியாக அள்ளித் தருவதும் மற்றும் வாழ்க்கையின் போக்கை (Life style) உயர்த்தி தருவதும் ஆன தருணம் எந்த தசை காலங்களாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வதில் எல்லோருக்கும் மிகுந்த ஆவலாக இருக்கும்.


  லக்கன யோக தசையானது ஒருவருக்கு யோகத்தை அள்ளித் தந்து விடும் என்றோ அல்லது லக்கன அவ யோக தசைகள் ஜாதகருக்கு கெடு பலன்களை தந்து விடும் என்றோ அறுதியிட்டு கூறிவிட முடியாது.


  லக்கன பாவத்திற்கு திரிகோண ஸ்தானமான 1,5,9 ஆம் அதிபதியானது அதன் தசை காலங்களில் யோகத்தை அள்ளித் தரும் என்பது பொதுவான விதி ஆகும்.


  மேஷ லக்னத்திற்கு அஷ்டமாதிபதியாகவும் இருந்தாலும் லக்கனாதிபதி என்ற வகையில் செவ்வாய் பகவானும்,பஞ்சம ஸ்தான  அதிபதியான சூரியன் பகவான் தசை மற்றும் பாக்ய அதிபதியான குரு பகவான் தசையும் எவ்வித பங்கத்திற்கும் உட்படாமல் சுபத்துவ நிலையை அடைந்திருந்தால் அதன் தசை காலங்களில் யோகத்தை அள்ளிக் கொடுக்கும்.


  மேற்கண்ட குரு , சூரியன் ‌மற்றும் செவ்வாய் தசைகள் நீசம்,பகை , அஸ்தமனம் மற்றும் வக்கிரம் போன்ற நிலைகளில் பலவீனம் அடைந்து இருந்தாலும் அல்லது இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுடன்  சேர்ந்து பாவத்துவ நிலையினை அடைந்து இருந்தாலும் யோகத்தை தருவதற்கு பதிலாக இன்னல்களை மிகுதியாக தந்து விடும் நிலையினை அடைகிறது.


இதேபோல மேஷ லக்கினத்திற்கு அவ‌யோக தசையாக புதன் பகவான் தசை, சுக்கிரன்  மற்றும் சனி பகவான் தசை அமைகிறது .


 புதன் , சுக்கிரன் மற்றும் சனி தசைகள் அவயோக தசைகள் என்றாலும்

 உப ஜெய ஸ்தானமான 3,6,10,11 ஆம் இடங்களில் நின்று நட்பு நிலையில் இருந்தாலோ அல்லது இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறை சந்திரன் சுக்கிரன், தனித்த புதன்  தொடர்பினை பெற்றாலோ அவ   யோகம் தரும் தசைகளே யோகத்தை தரக்கூடிய நிலையில் அமைந்து விடுகிறது.


          ரிஷப லக்கனத்திற்கு யோகம் அள்ளி தரக்கூடிய தசைகளாக கருதப்படுபவை லக்கனாதிபதி என்ற வகையில் சுக்கிர திசையும், 

தன மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான புதன் தசை மற்றும் தர்ம-கர்மாதிபதியான  சனி தசை ஆகிய மூன்று திசைகள் ஆகும்.


  மேற்கண்ட இந்த மூன்று பலவீனம் மற்றும் பாவத்துவம் அடையாமல் இருந்தால் மட்டுமே அதன் தசை காலங்களில் யோகத்தை அள்ளித் தரக்கூடிய நிலையினை அடைகிறது.


 அதே நேரத்தில் ரிஷப லக்கனத்திற்கு சூரியன்,சந்திரன் ,செவ்வாய் மற்றும் குரு தசைகள் அவ யோகத்தை தரக்கூடிய தசையாக அமைகிறது.மேற்கண்ட இவையே உப ஜெய ஸ்தானத்தில் நட்பு நிலையிலோ அல்லது சுபத்துவ நிலையிலோ நல்லதை தரக்கூடிய தசையாக அமைகிறது.


  மிதுனம் லக்கனத்திற்கு புதன் பகவான் நான்காம் இடத்தில் உச்சம், மூலதரிகோணம்  மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று நிற்பதை விட லக்கனத்தில்  திக் பலம் மற்றும் ஆட்சி நிலை  பெற்று புதன் பகவான் இருப்பதே மிகுந்த யோகத்தை சாதகருக்கு அள்ளித் தரக்கூடிய அமைப்பை கொண்டதாகும்.

 அதே நேரத்தில் நான்காம் அதிபதி பலம் பெற்றிருந்தால் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தரும் என்ற வகையில் தான் லக்னத்தில் இருப்பது நல்லது என்கிறோம்.


    புதன் பகவானை அடுத்து சுக்கிரன் மற்றும் சனி யோகத்தை அள்ளித்தரும் தசையாக மிதுன லக்னத்திற்கு கருதப்படுகிறது.


  மிதுன லக்னத்திற்கு வரக்கூடாத தசையாக கருதப்படுவதை செவ்வாய் தசை , குரு தசை  ஆகும்.


  சூரிய மற்றும் சந்திர தசைகள் எதிர் தன்மை  உடைய  தசையாக கருதப்பட்டாலும் அவை ஒளி கிரகம் என்ற வகையில் மேலும் புதனுக்கு அதி நட்பு கிரகம் சூரியன் என்ற வகையிலும் ஓரளவு நல்ல பலனை தரக்கூடிய தசையாக அமைகிறது.


‌  மிதுன லக்னத்திற்கு சூரிய ,சந்திர, செவ்வாய் மற்றும் குரு ஆகிய கிரகங்கள்  உப ஜெய ஸ்தானங்களில் நட்பு நிலையில் இருந்தால் அல்லது இயற்கை சுப கிரகங்களின் தொடர்பு கொண்ட நிலையில் யோகத்தை அள்ளிக் கொடுக்கிறது.


  கடக லக்னத்திற்கு சந்திரன், குரு, செவ்வாய் மற்றும் சூரிய தசைகள் மிகுந்த யோகத்தை தரக்கூடிய தசையாக சாதகருக்கு அமைகிறது.


    கடக லக்னத்திற்கு சூரிய, சந்திர செவ்வாய் மற்றும் குரு தசைகள் யோக தசைகளாக இருந்தாலும் அவை இயற்கை பாவ கிரகமான சனி, செவ்வாய், ராகு  மற்றும் கேது தொடர்பை பெற்றாலும் அல்லது பகை, நீசம், அஸ்தமனம் போன்ற வகையில் பலம் இரழந்தாலும் அதன் தசை காலங்களில் யோகத்தை தந்து விடுவது இல்லை.


  கடக லக்னத்திற்கு கட்டாயம் வரக்கூடாத தசையாக கருதப்படுபவை இருள் கிரகமான சனி பகவான் தசையும் மற்றும் புதன் பகவான் தசையும் ஆகும்.

இவையும் சில நேரங்களில் இயற்கை சுப கிரகமான குருபகவான் பார்த்த நிலையில் அல்லது இயற்கை சுப கிரகங்கள் தொடர்பு உடைய நிலையில் தசை நடத்தினால் மிகுதியாக கெடு பலனை தந்து விடுவதில்லை.


  சிம்மம் லக்னத்திற்கு யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசைகள் சூரிய தசை, செவ்வாய் திசை  மாற்றும் குரு தசை ஆகும். ஒளிக் கிரகம் என்ற வகையில் வளர்பிறை சந்திரனாக இருந்தால் 12-ஆம் இடம் அதிபதியாக வரும் சந்திர தசையும் சில நேரங்களில் சாதகருக்கு யோகத்தை அள்ளித் தரும்.


 ஒளிக்கிரகமான சிம்மம் லக்னத்திற்கு வரக்கூடாத தசையாக கருதப்படுபவை இருள் கிரகமான சனி பகவான் தசை மற்றும் சுக்கிரன் தசை ஆகும்.


  புதன் பகவான் எதிர் தன்னை வாய்ந்த கிரகம் எனினும் சூரியனுக்கு அதி நட்பு கிரகம் என்ற வகையில் அதன் தசை காலங்களில் நல்ல பலனை தந்து விடுகிறது.


 கன்னி லக்கினத்திற்கு புதன் பகவான் லக்னத்தில் உச்சம், ஆட்சி, மூலதரிகோணம் மற்றும் திக்பலம் என்ற வகையில் நின்று வலுப்பெற்று நின்று தசை நடத்தினால் யோகத்தை அள்ளித் தரும் .மாறாக பத்தாமிடத்தில் இருந்தால் கேந்திர ஆதித்ய தோஷத்தை தரக்கூடிய வாய்ப்பு உண்டு.


புதன் திசையை தொடர்ந்து சுக்கிரன் மற்றும் சனி தசைகள் கன்னி லக்கினத்திற்கு யோகத்தை தரக்கூடிய தசையாக கருதப்படுகிறது.


‌ கன்னி லக்கினத்திற்கு வரக்கூடாத தசையாக கருதப்படுபவை குரு தசை மற்றும் செவ்வாய் தசை மிக முக்கியமானதாகும்.


 ஒளி கிரகமான சூரிய ,சந்திர தசைகள் எதிர் தன்மை வாய்ந்த தசையாக கருதினாலும் ஒளி கிரகம் என்ற வகையில் அதன் தசை காலங்களில் ஓரளவு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் இருந்து விடுகிறது.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

             



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

  (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.


Email masterastroravi@gmail.com

No comments: