Wednesday 19 April 2023

மூன்று மற்றும் பதினொன்றாம் இடம் ஓர் ஆய்வு

 மூன்று மற்றும் பதினொன்றாம் இடம் ஓர் ஆய்வு.

                 


ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    ஒருவரது ஜாதக கட்டத்தில் மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில்   இயற்கை சுப கிரகங்கள் இருந்தால் கூடுதலான யோக பலனை அந்த கிரக தசையில் ஜாதகருக்கு அள்ளி கொடுப்பார்.


 இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற கிரகங்கள் நின்றாலும் அல்லது லக்கன அவ யோகர் நின்றாலும் நல்ல பலனைத் தரக்கூடிய நிலையில் தான் பெரும்பாலும் இருக்கும்.


மூன்றாம் இடத்தில் நின்றாலும் மற்றும் பதினொன்றாம் இடத்தில் கிரகங்கள் நின்றாலும் லக்கன யோகரின் நட்சத்திர சாரத்தில் நிற்கின்ற நிலையில் இருக்கும்.


 இது போன்ற யோக நட்சத்திரம் சாரத்தில் நிற்கின்ற நிலையில் தான் யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசையாக விளங்குகிறது.


  உதாரணமாக மீன லக்கனத்திற்கு மூன்றாம் இடத்தில் நிற்கின்ற கிரகங்கள் அதாவது ரிஷபத்தில் கார்த்திகை, ரோகினி மற்றும் மீருகச்சீரிடம் நட்சத்திரம் சாரத்தில் நிற்கும்.இவை முறையே மீனம் லக்கனத்திற்கு யோகரான சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் போன்ற ஏதாவது ஒரு நட்சத்திர சாரத்தில் நிற்கின்ற நிலையில் இருக்கும்.


 இதேபோல பதினொன்றாம் இடத்தில் உத்ராடம், திருவோணம் மற்றும் அவிட்டம் போன்ற நட்சத்திர சாரமானது  லக்கன யோகரான சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் பகவானின் நட்சத்திர சாரத்தில் நிற்கின்ற நிலையில் இருக்கும்.


பதினொன்றாம் இடம் சர லக்கனங்களுக்கு பாதக ஸ்தானமாக இருந்தாலும் பதினொன்றாம் இட அதிபதி பதினொன்றாம் இடத்தில் நின்ற நிலையில் மட்டுமே அதிகமான பாதகங்களை ஜாதகருக்கு தரக்கூடிய நிலையில் இருக்கும்.


 ஆறாம் இடம் ஜாதகருக்கு கடன்,,பிணி ,எதிர்ப்பு போன்றவை தரக்கூடிய இடமாக இருந்தாலும், பதினொன்றாம் இடம் இவை அனைத்தையும் தீர்க்க கூடிய இடமாக அமைகிறது.


 இதேபோல மூன்றாம் இடம் மறைவிட ஸ்தானமாக இருந்தாலும் அவை பெரிய மறைவிட ஸ்தானமாக கருதப்படவில்லை.


 மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் நின்றால் அந்த கிரகங்கள் தனது சம சப்தம பார்வையினால் திரிகோண மற்றும் லக்கன யோக ஸ்தானங்களான

 ஐந்து மற்றும் ஒன்பது இடத்தை பார்வை செய்யும் அமைப்பை பெறுகிறது.


  மூன்றாம் இடம் இளைய சகோதரத்தையும் மற்றும் பதினொன்றாம் இடம் மூத்த சகோதர ஸ்தானத்தையும் குறிக்கிறது.


 மூன்றாம் இடம் கீர்த்தி,புகழ், அந்தஸ்து, ,எழுத்து,இசை, காம வீரியம் .... போன்றவற்றை குறிக்கின்ற ஸ்தானமாக கருதப்படுகிறது.


 பதினொன்றாம் இடம் லாப ஸ்தானமாகவும்,இளைய தாரத்தை குறிக்கும் இடமாக கருதப்படுகிறது.


 உபஜெய ஸ்தானமாக 3,6,10 ,11 ஆம் இடங்களில் மூன்று மற்றும் பதினொன்றாம் இடம் மிக முக்கிய ஸ்தானமான கருதப்படுகிறது.


 மூன்று மற்றும் பதினொன்றாம் இடங்களில் எவ்வித கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் நல்லது.இவ்வாறு எவ்வித கிரகங்களும் இல்லாமல் அல்லது பார்க்காமல் இருந்தால் மூன்று மற்றும் பதினொன்றாம் இட அதிபதிகளை பொறுத்து அந்த இடத்தின் பலன் அமைகிறது.


  மூன்று மற்றும் பதினொன்றாம் இட அதிபதி கேந்திர மற்றும் கோணங்களில் நின்று வலுப்பெற்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு தசை நடத்தானால் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளி தருகிறது.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                    


அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: