Wednesday 19 April 2023

பலன் அளிக்கும் முறை--உதாரண ஜாதக விளக்கம்

 பலன் அளிக்கும் முறை- உதாரண ஜாதகம்

         



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஜாதகத்தில் ஒருவரது  திருமணத்தை பற்றி ஆராய்ச்சி செய்து பார்க்க அவருடைய ஜாதகத்தில் லக்கன பாவகம் என்னும் ஜாதகர் , அவரது குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் ,

 களத்திர  ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும்  மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இயற்றை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .இவை தவிர தாம்பத்ய சுகத்தை தரும் சுக்கிரன் மற்றும் குழந்தை பாக்கியத்தை தரக்கூடிய குரு பகவான் 

ஆகியவற்றையும் ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும்.


   மேற்கண்ட 1,2,7,8 ஆம் இடங்களுடனோ அல்லது குரு மற்றும் சுக்கிரன் உடனோ சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் எட்டு பாகைக்குள்ளாக சேர்ந்து இருப்பதும் அல்லது பார்ப்பதும் திருமண அமைப்பை தடை படுத்துவதும் அல்லது கால தாமதம் செய்வதும் நடக்கும் தசை புக்தி மற்றும் கோச்சார பலன்களை சார்ந்து அமைகிறது.


மேற்கண்ட ஜோதிட கருத்துக்களை விளக்கும் ஒரு உதாரண ஜாதகம் இருப்பதால் அந்த ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு விளக்கம் தந்தால் உங்களுக்கு எளிமையாக புரிபடும் .


பிறந்த தேதி: 22.01.1995

பிறந்த நேரம்: 9.45 am

பிறந்த இடம்; புதுக்கோட்டை 


ஜென்ம லக்னம் கும்பம்

ஜென்ம ராசி; கன்னி

ஜென்ம நட்சத்திரம்; அஸ்தம் முதல் பாதம் 

தசை இருப்பு : 08-05-18


  ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் சனி இருப்பதோ அல்லது லக்கனப் பாவத்தை சனி பார்ப்பதோ நல்லதல்ல இவ்வாறு லக்னத்திலே சளி இருந்து ஆட்சி பெற்ற நிலையில் செவ்வாய் அதை பார்க்கக் கூடிய நிலையில் குணம் கெட்ட நபராக இருப்பார் .கோபத்தன்மை கூடுதலாக மேலங்கி நிற்கும்.


   லக்னத்தில் சனி 16 பாகைக்கு மேல் இருப்பதால் ஏழாம் இடத்தில் உள்ள செவ்வாய் தொடக்க ஆறு பாகைக்குள் இருப்பதால் லக்னத்தில் உள்ள சனி ஏழாம் இடத்தில் உள்ள செவ்வாயை பார்க்கவில்லை ஆனால் அதே நேரத்தில் ஏழாம் பாவகத்தை பார்வை செய்கிறது.

ஆனால் ஏழாம் இடத்தில் உள்ள செவ்வாய் லக்னத்தில் உள்ள சனி பகவானை பார்வை செய்கிறது.


  குடும்ப அதிபதியும் மற்றும் புத்திர ஸ்தான அதிபதியும் ஆன குரு பகவான் சுக்கிரனுடைய இணைந்திருப்பது தாம்பத்திய சுகத்தை கெடுக்கும் என்றாலும் இந்த குரு பகவானை லக்கனத்தில் உள்ள சனி பகவான் பத்தாம் இடத்தில் உள்ள குரு பகவானை பார்க்க வில்லை என்பது மிக நல்ல விஷயம் ஆகும்.ஆனால் அதே நேரத்தில் சனி பகவானால் பார்க்கப்படாத  குரு பகவான் ஆனவர் குருவின்  நட்பு கிரகமான செவ்வாய் பகவான் தனது நான்காம் பார்வையால் குரு பகவானை பார்வை செய்வது பெரிய கெடு பலனை தந்து விடுவதில்லை.


 தன் வீட்டை தானே பார்க்க கூடிய கிரகம் அந்த இடத்தை வலுப்படுத்தும் என்ற விதிப்படி லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் உள்ள குரு பகவான் தனது ஐந்தாவது பார்வையால் குடும்ப ஸ்தானத்தினை பார்வை செய்கிறார்.பொளர்ணமியை விட்டு விலகிய இயற்கை சுப கிரகமான சந்திரன் பார்வையும் குடும்ப ஸ்தானத்தில் விழுந்து சுபத்துவ படுத்திய  நிலையில் உள்ளது.


  களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் செவ்வாய் இருப்பதும், ஏழாம் இட அதிபதி சூரியன் பன்னிரண்டாம் இடமான மறைவு ஸ்தானத்தில் பகை வீடு ஏறிய நிற்பதும் மற்றும் களத்திரகாரன் சுக்கிரன் பகை வீடு ஏறிய நிலையில் சனியின் பத்தாம் பார்வை சுக்கிரன் பகவான் மேலே விழுந்து பாவத்துவ நிலையை அடைய வைப்பதும் ஆகிய மூன்று நிலைகளில் பலம் இழந்த நிலையில் இருப்பதால் திருமணம் கால தாமதம் ஆகி கொண்டே செல்கிறது.


தற்போது ராகு தசையில் சுக்கிர புத்தி நடப்பில் இருப்பதால் இந்த சுக்கிரன் புத்தி 26 ஜனவரி 2025 வரை நடப்பில் இருப்பதால் சுக்கிரன் புத்தியும் சனி பார்வையில் இருப்பதால் சுக்கிரன் புத்தி நிறைவு பெறக்கூடிய நிலையில் திருமணத்தை கொடுத்து விட்டு செல்வார் என்பது எனது கருத்து ஆகும்.


நன்றி


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)..


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   9715189647


மற்றொரு செல்: 7402570899

          



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்


Email masterastroravi@gmail.com

No comments: