Tuesday 18 April 2023

கிரக சேர்க்கை மற்றும் பார்வை சூட்சுமங்கள்

கிரக சேர்க்கை மற்றும் பார்வை சூட்சுமங்கள்.

             


 செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு ஜாதகத்தில்

" குரு பகவான் பார்த்தால் கோடி நன்மை" 

"சனி பார்த்தால் சர்வநாசம்" என்றும் அழைக்கப்படுகிறது.


  எல்லா கிரகங்களுக்கும் ஏழாவது பார்வை உண்டு என்றாலும் சனி பகவானுக்கு மூன்று மற்றும் பத்தாம் சிறப்பு பார்வையும், குரு பகவானுக்கு ஐந்து மற்றும் ஒன்பதாம் சிறப்பு பார்வையும்  மற்றும் செவ்வாய் பகவானுக்கு நான்கு  மற்றும் எட்டாம் சிறப்பு பார்வையும் உண்டு.


  கிரகங்களில் பங்கம் அடையாத 

 குரு பகவான் மற்றும் வளர்பிறை சந்திரன் 🌙 ஆகிய இரு கிரகங்களும் முழு முதல் சுப கிரகமாக கருதப்படுகிறது.

இவ்விரு கிரகங்களும் தனித்தனியாக நின்று ஒரு கிரகத்தை பார்வை செய்தால் அந்த கிரகம் அதிக சுபத்துவமான கிரகமாக கருதப்பட வேண்டும்.


     இவ்வாறு அதிக சுபத்துவமான கிரகம் தொடர்பு கொண்ட எண்ணங்களும் மற்றும் செயல்களும் ஜாதகருக்கு உருவாகி அவை தொடர்பான படிப்பு மற்றும் தொழில் முனைவு கொள்ள செய்கிறது.


   அதேபோல அவை இரண்டும் எந்த ஸ்தானத்தில் பார்வை செய்கிறதோ அந்த ஸ்தானம் அதிக சுபத்துவமான நிலையாக கருதப்படுகிறது.அந்த ஸ்தான ஆதிபத்தியம் பலனை அதிகரிக்கவே செய்யும்.


  குரு பகவான் ஆட்சி பெற்ற நிலையில் வளர்பிறை சந்திரன் உடன் சேர்ந்து நிற்கும் போது அவை நிற்கின்ற இடத்தை அதிகம் பாதிப்பு அடைகிறது.


  குரு பகவான் பார்வை 100 % கிடைக்க குரு பகவான் பங்கம் அடையாத நிலையில் இருக்க வேண்டும்.


      கீழ்கண்ட நிலையில் உள்ள 

குரு பகவான் பங்கம் அடைந்த குரு பகவானாக அழைக்கப்படுகிறது.


    1) குரு பகவான் இருள் கிரகமான  சனி பகவான் உடன் அல்லது நிழல் கிரகமான ராகு பகவானுடன் 8 பாகைக்குள் நெருக்கமாக இணைந்த நிலையில் ,


   2) சனி பார்த்த குரு பகவான் பார்வை


    3) குரு பகவான் எதிர் தன்மையான‌ சுக்கிரன் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் இதேபோல புதன் பகவான் வீடான மிதுனம் மற்றும் கன்னி வீடுகளில் இருந்து பார்வை செய்வது ,


    4) நீசம் பெற்ற குரு பகவான் நீச பங்கம் பெறாத நிலையில்


     இவ்வாறான அமைப்பில் உள்ள 

குரு பகவான் பங்கம் அடைந்த குரு பகவானாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


  குரு பகவான் தனது சொந்த மற்றும்  நட்பு கிரகங்களான செவ்வாய், சூரியன், சந்திரன் ஆகிய வீடுகளான தனுசு ♐, மீனம் 🐟, மேஷம் ♈, விருச்சிகம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய வீடுகளில் இருந்து பாவத்துவம் அடையாத நிலையில் பார்க்கப்படும் குரு பகவான் பங்கம் அடையாத குரு பகவானாக  கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


  குரு பகவான் ஆனவர் சந்திரனுடன் சேர்ந்திருக்கும் பொழுது குரு சந்திர யோகத்தையும், செவ்வாய் பகவான் உடன் சேர்ந்திருக்கும் போது குரு மங்கள யோகத்தையும் மற்றும்  சூரியனுடன் குரு சேரும்போது அல்லது பார்த்துக் கொள்ளும்போது சிவ ராஜ யோகத்தையும் சாதகருக்கு தருகிறது.


  செவ்வாய் பகவான் ஆனவர் குரு  அணியைச் சேர்ந்த குரு சந்திரன், செவ்வாய் மற்றும் கேது பகவான் ஆகிய கிரகங்களை பார்வை செய்தாலும் மற்றும் சேர்க்கை பெற்ற நிலையில் இருந்தாலும் பாவத்துவம் அடைந்து விடுவது கிடையாது.


  செவ்வாய் பகவான் குரு பகவானுடன் சேர்ந்திருக்கும் பொழுது "குரு மங்கள யோகத்தையும்", சந்திரனுடன் சேர்ந்து நிற்கும் போது" சசி மங்கள யோகத்தையும்", சுக்கிரனுடன் சேர்ந்து நிற்கும் போது பிருகு மங்கள யோகத்தையும் மற்றும் செவ்வாய் பகவான் ஆனவர்  கேது பகவானுடன் இணைந்து நிற்கும் பொழுது சூட்சும வலுவையும் பெற்று அதன் தசை காலங்களில்  யோகங்களை சாதகருக்கு கொடுக்கிறது.


  இதே செவ்வாய் பகவான் ஆனவர் இருள் மற்றும் முழு பாவ கிரகமான சனி மற்றும் நிழல் கிரகமான ராகு உடன் இணைந்த  நிலையில் ‌அதிக பாவத்துவ நிலையினை அடைவார். இவ்வாறு பாவத்துவம் அடைந்த சனி பார்க்கும் இடங்களும் அதிக பாவத்துவ நிலை அடைகிறது.


 செவ்வாய் பகவான் ஆனவர் 

 சனியை  பார்க்கின்ற நிலையிலும்  அதே நேரத்தில் சனி பகவானும் செவ்வாயை பார்க்கின்ற அமைப்பில் உள்ள நிலையும் அதிக பாவத்துவ நிலையினை உருவாக்கும்.


 உதாரணமாக மகரத்தில்  சனி பகவான் அமர்ந்து இருக்க  துலாம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்த நிலையில் செவ்வாய் நான்காம் பார்வையாக சளியையும் மற்றும் அந்த சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் செவ்வாயையும் பார்க்கின்ற அமைப்பில் அதிக பாவத்துவ நிலை அடைவார்.


  சந்திர பகவான் தனது ஏழாவது பார்வையால் ஏழாம் இடத்தை பார்வை செய்து சுபத்துவ நிலையினை  அடையச் செய்தாலும் ,இதற்கு முன்பின் ராசியில் 15 பாகம் வரை சந்திரனுடைய பார்வை வீச்சு அமையும் என்ற வகையில் வளர்பிறை சந்திரனுக்கு ஆறு , ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் சுப கிரகங்கள் இருந்தால் அதிகமான சுபத்து நிலை அடைந்து அதன் தசையில் யோகத்தை தருவார் என்பது ஜோதிட விதியாகும்

 மாறாக தேய்பிறைச் சந்திரனாக இருந்தாலும் அல்லது ஆறு ,ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் இந்த சந்திர அதி யோகம் வேலை செய்வது கிடையாது.


   தேய்பிறை சந்திரன் ஆனவர் தன்னுடன் இணைந்த கிரகங்கள் அனைத்தையும் பாவத்துவ நிலையினை அடைய செய்கிறது.


  ஒரு வீட்டில் சனி, செவ்வாய் மற்றும் தேய்பிறை சந்திரன் இணைந்து நின்றாலும் அல்லது சனி ,ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் இணைந்து செவ்வாய் பார்த்த நிலையிலும் அல்லது செவ்வாய், ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் இணைந்த நிலையில் சனி பகவான் பார்த்தாலும் அந்த ஸ்தானம் மற்றும் அவை பார்க்கக்கூடிய இடங்கள் அதிக பாவத்துவ நிலையினை அடைகிறது.இத்தகைய அதிக பாவத்துவ நிலையினை ஒற்றை பங்கம் அடையாத குரு பகவான் பார்வையானது அப்படியே சுபத்துவ நிலையினை அடையச் செய்கிறது.


 ஒரு கிரகத்தையோ அல்லது ஒரு ஸ்தானத்தையும் சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் பார்த்தாலும் குரு பகவானும் அந்த இடத்தை பார்வை செய்தால் சுபத்துவ தன்மையே மேலோங்கிய நிலை என்ற வகையில் அந்த கிரகம் அல்லது அந்த ஸ்தானம் சுபத்துவ நிலை அடைகிறது.


இதேபோல குரு பார்த்த சனி மற்றும் செவ்வாய் உடைய பார்வையானது நன்மையை தராவிட்டாலும் அதனுடைய பார்வை தீய சக்தி வழிகாட்டப்பட்ட பார்வையாக அமையும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   +91 97151 89647 


மற்றொரு செல்: 7402570899


Email: masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


           


அன்புடன்


   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

        M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: